Rohit Sharma
Rohit Sharma

IND vs AUS: உலகிலேயே நம்பர் 1 டி20 கிரிக்கெட்டின் ராஜா மாபெரும் சாதனை படைத்த ரோஹித் சர்மா

5/5 (3)

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2024 டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடிய ஆட்டம் கிரிக்கெட் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. அவர் 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். 7 ஃபோர், 8 சிக்ஸ் அடித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதற வைத்தார்.

அதன் மூலம் பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கி இருக்கிறார். சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குறித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகிய இருவரையும் முந்தி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் ரோஹித் சர்மா.

தற்போது ரோஹித் சர்மா 149 இன்னிங்ஸ்களில் 4165 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 32 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 140.75 ஆகும். பாபர் அசாம் 116 இன்னிங்ஸ்களில் 4145 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 41 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 129. விராட் கோலி 115 இன்னிங்ஸ்களில் 4103 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 49 ஆகும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 137. இந்த உலக சாதனையை செய்த ரோஹித் சர்மா, அடுத்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன்கள் வரிசையிலும் முதல் இடத்தை பாபர் அசாமுடன் பகிர்ந்து கொண்டு உள்ளார். பாபர் அசாம் 85 போட்டிகளில் 48 வெற்றிகள் பெற்று இருக்கிறார். அவரது அதிக வெற்றிகள் குவித்த சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா 60 போட்டிகளில் 48 வெற்றிகள் பெற்று இருக்கிறார்.

இந்தப் போட்டியில் தன் 200வது சர்வதேச டி20 சிக்ஸரை கடந்தார் ரோஹித் சர்மா. அதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 200 சிக்ஸ் என்ற மைல்கல்லை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். இந்தப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரில் 29 ரன்கள் குவித்தார் ரோஹித். அதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார்.

1 Comment

Comments are closed