ThiruvarurTemple Chariot
ThiruvarurTemple Chariot

திருவாரூர் தேர் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு மற்றும் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

5/5 (12votes)

நாளை திருவாரூர் தேரோட்டம் நடைப்பெற உள்ளதையடுத்து திருவாரூர் ஆழித்தேருக்கு வார்னிஷ் அடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் ஆழித்தேருக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் வார்னிஷ் அடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது . நாளை தேர் திருவிழா நடைபெற உள்ள நிலையில் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் விளங்குவது புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில். இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த பிப்ரவரி 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் நாளை மார்ச் 21ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு தேரின் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் தற்போது பெரிய தேருக்கு ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி வார்னிஷ் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

உலகப் புகழ்பெற்ற இந்த ஆழித் தேரோட்டத்தை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான பொதுமக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிவர். எனவே அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையின் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மக்களும் தேரோட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் திருவிழா மார்ச் 21 ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, நகர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மது கடைகள், மதுக்கூடங்கள், தனியார் மது கடைகள் ஆகியவற்றை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.