தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன் திருத்தேரில் எழுந்தருளினார். இன்று அதிகாலை 5.20 மணிக்கு விநாயகர் தேரும், 5.30 மணிக்கு சுப்பிரமணியர் தேரும் இழுக்கப்பட்டது.
ஆழித்தேரை வடம் பிடேத்து இழுப்பதால் கயிலையில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆழித்தேரில் தியாக சுவாமி ஆடி ஆசைந்து வரும் போது ஆரூரா…தியாகேசா என மக்கள் விண்ணதிர கோஷமிடுவார்கள்.