Thiruvalluvar Day
Thiruvalluvar Day

Thiruvalluvar Day : பள்ளிக்கல்வித்துறையின் மாணவர்களுக்கான சூப்பர் அறிவிப்பு

5/5 (10)

நமக்கெல்லாம் திருவள்ளுவர் சிலைன்னு சொன்னாலே கன்னியாகுமரில 133 அடிக்கு உயர்ந்திருக்கிற அந்த திருவள்ளுவர் சிலை தான் ஞாபகம் வரும். அந்த சிலையை நிறுவி இந்த வருஷத்தோட 25 வருஷம் ஆகுது. அந்த திருவள்ளுவர் சிலையோட வெள்ளி விழாவை கொண்டாட தமிழக அரசு தயாராகிட்டு வருது. இந்த நிலைல தான் பள்ளிக்கல்வி துறை சார்பாக திருக்குறள் சம்பந்தமான போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

பிரிவு-1 : 6 வயது வரையிலானவர்களுக்கு ஒரு அதிகாரம்
பிரிவு-2 : 7 முதல் 10 வயது வரையிலானவர்களுக்கு 3 அதிகாரங்கள்
பிரிவு-3 : 8 முதல் 14 வயது வரையிலானவர்களுக்கு 5 அதிகாரங்கள் என
மூன்று பிரிவினரும் திருக்குறளை ஒப்புவித்து அதனை வீடியோவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும்.

கட்டுரை போட்டி

கட்டுரை போட்டிக்கு 14 முதல் 17 வயதில் இருக்கு குழந்தைகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. கற்றலின் மேன்மைக் குறித்து திருக்குறள்
  2. அன்றாட வாழ்க்கையில் திருக்குறளின் பங்கு இரு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 3 பக்க அளவில் கட்டுரைகள் அமைதல் வேண்டும். கட்டுரைகளை தட்டச்சுச் செய்து PDF கோப்பாக அனுப்ப வேண்டும்.

ஓவிய போட்டி

பிரிவு-1 : அனைத்துப் பிரிவினர் திருக்குறளில், ஏதேனும் ஒரு குறளைக் கருப்பொருளாக கொண்டு(content) ஓவியங்கள் அமைய வேண்டும். அல்லது திருக்குறளின் நன்மைகள் குறித்து ஓவியங்கள் அமையலாம்.
பிரிவு- 2 : 1ம் வகுப்பு முதல் 5 வரையிலானவர்கள் திருவள்ளுவர் படத்தை ஓவியமாக தீட்ட வேண்டும். இரு பிரிவினரும் வரைந்த ஓவியங்களை புகைப்படங்களாக எடுத்து அனுப்ப வேண்டும்.

குறும்பட போட்டி

இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் 17 முதல் 21 வயதுக்கு உள்ளவர்களாக இருக்க வேண்டும். குறும்படத்தின் மையக்கருத்து திருக்குறள் தொடர்புடையதாக இருத்தல் வேண்டும். படைப்புகளை mp4 format- ல் அனுப்ப வேண்டும்.

செல்பி போட்டி

பொது இடங்களில் வைக்கப்பட்டு இருக்கும் திருவள்ளுவர் சிலை அல்லது திருக்குறள் எழுதிய சுவர்களில் முன்பு செல்பி எடுத்து புகைப்படத்தை அனுப்பும் செல்பி போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிதை போட்டி

இந்த போட்டிக்கு வயதுவரம்பு கிடையாது. யார் வேணாலும் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமானவர்கள் உங்களுடைய படைப்புகளை Video, Photo, document pdf வடிவில் tndiprmhkural@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பி வைக்க கடைசி தேதி டிசம்பர் 18 ஆகும்.