நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
70 முதல் இன்று வரை சுமார் 50 ஆண்டிற்கும் மேலாக தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth). இவரின் பிறந்த நாளினை இன்று உலகெங்கிலும் இருக்கக்கூடிய பலர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.நாடு முழுவதும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் – ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்ட ட்வீட்
திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.