Lokeshkanagaraj Tweet Rajinikanth Coolie
Lokeshkanagaraj Tweet Rajinikanth Coolie

கூலி அப்டேட் இன்று மாலை ஆறு மணிக்கு லோகேஷ் கனகராஜின் சிறப்பு அறிவிப்பு

5/5 (15)

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு கூலி படத்திலிருந்து அப்டேட் வெளியாக இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் கூலி திரைப்படத்திலிருந்து அப்டேட் இன்று ஆறு மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் அந்த அப்டேட் என்ன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படம் உருவாகி வருகின்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சென்னையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இப்படப்பிடிப்பில் கலந்துகொள்ள ரஜினி சில நாட்களுக்கு முன்பு ஜெய்ப்பூருக்கு புறப்பட்டார்.

தற்போது அங்கு ரஜினி மற்றும் அமீர் கான் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர் கான் கூலி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக வந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த தகவல் உண்மையாக இருக்கவேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் தனது 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும் திரைபிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினி நடித்து வரும் கூலி திரைப்படத்திலிருந்து ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு எதாவது அப்டேட் வருமா என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கூலி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு பதிவு போட்டுள்ளார்.

இன்று மாலை ஆறு மணி என லோகேஷ் கனகராஜ் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். இதன் மூலம் இன்று மாலை ஆறு மணிக்கு கூலி படத்திலிருந்து ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அப்டேட் வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கூலி படத்திலிருந்து என்ன அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர். அநேகமாக கூலி படத்தின் கிலிம்ஸ் வீடியோ அல்லது ஸ்பெஷல் போஸ்டர் எதாவது வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

என்ன அறிவிப்பாக இருந்தாலும் அது ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் கண்டிப்பாக இருக்கும் என்றே தெரிகின்றது. இந்நிலையில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வரை நடைபெறும் என்றும், அநேகமாக அடுத்தாண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இத்தகவலில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை.