இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாகத்தின் ‘வழிநெடுக காட்டுமல்லி’, ‘உன்னோடு நடந்தா…’, ‘அருட்பெரும் ஜோதி…’ பாடல்கள் வெளியாகி மனம் கவர்ந்திருந்தது. தற்போது ‘தெனந் தெனமும்’ பாடல் வெளியாகி இதயங்களை வென்றது. இந்நிலையில் இன்று சென்னையில் ‘விடுதலை பாகம் 2’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்று வருகிறது.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை பாகம் 2’ டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இவ்விழாவில் பேசியிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா, “இந்தப் படத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு வெற்றி மாறன் உழைக்கிறார்னு எனக்கு தெரியும். ‘தெனந் தெனமும்’ பாடலை சஞ்சய் சுப்ரமணியம் பாடினார். அதன் பிறகு இயக்குநர் என்னை பாட சொல்லிக் கேட்டார். அதன் பிறகு சஞ்சய் ‘மனசுல’ பாடல் பாடினார். அவர் பெரிய சங்கீத வித்துவான்.
ராஜீவ் மேனனை பார்த்ததும் நான் யார்னு கேட்டேன். எனக்கு அவரை தெரியாது. அப்புறம் கேமரா பண்றவரான்னு கேட்டு தெரிஞ்சுகிட்டேன். சிறப்பாக நடித்திருக்கிறார் அவர். சேத்தன் நடித்ததைப் பார்த்து நான் பாராடினேன். முதல் பாகம் மாதிரி இரண்டாம் பாக்கத்தை நினைச்சுடாதீங்க. இதுல வேற மாதிரி வெற்றி மாறன் பயணிச்சிருக்காரு.
இந்தப் படத்திற்கு இசை அமைப்பது ஆகாயத்தில் புள்ளி வைப்பது மாதிரி. வெற்றி மாறன் சொல்லுவதையெல்லாம் கேட்டு அப்படியே இசையாக மாற்றினேன். நான் இசையமைக்கும்போது வெற்றி மாறன் எப்போது ரெக்கார்டு செய்து கொண்டே இருப்பார்.
இவ்வளவு நேரம் நான் ஒரு நிகழ்வுல இருந்தது இல்ல. நிகழ்வுக்கு போகுறதும் இல்லை. இந்த நிகழ்வுல முன்னாடியே பேசிடுங்கனு சொன்னாங்க. நான் இருக்கேனு சொன்னேன். எல்லோர் பேசுவதையும் கேட்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்று பேசியிருக்கிறார்.!
Comments are closed