திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கடியாச்சேரி கிராமத்தில் இன்று இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமாக விளங்கும் பள்ளிவாசல் திறக்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்வில் நேற்று இரவு 10, 000 மேற்பட்ட பொதுமக்கள் அனைத்து சமூக மக்கள் கலந்து கொண்டு கோலாகலமாக துவங்கியது அதனைத் தொடர்ந்து இன்று காலை பள்ளிவாசல் துவக்க நிகழ்விற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.
அப்பொழுது இந்து மக்கள் சார்பில் சீர்வரிசை எடுக்கப்பட்டது அதில் வாழைப்பழம் வெற்றிலை பாக்கு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர் வரிசைகள் வரிசையாக பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக பள்ளிவாசலில் வழங்கப்பட்டது அங்கு சீர்வரிசை எடுத்துச் சென்றவர்களை ஒருவருக்கொருவர் அன்புகளை பரிமாறிக் கொண்டு வெகு சிறப்பாக சீர்வரிசை எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில்.
இந்த பள்ளிவாசல் திறப்பு விழா இன்று கடியாச்சேரி பகுதியில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் சகோதரத்தை பேணும் வகையிலும் மனித நேயத்தை காக்கும் வகையிலும் மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் கடியாச்சேரி ஊரைச் சேர்ந்த பிற மதத்தைச் சார்ந்த பொதுமக்கள் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் சீர்வரிசை எடுத்து வந்து அசத்தினார்கள். அதனைத் தொடர்ந்து சீர்வரிசை பள்ளி வாசலுக்கு வந்தவுடன் தங்கள் உறவினர்களைப் போல ஒருவர் ஒருவர் கட்டி தழுவி அன்புகளை வெளிப்படுத்தி வந்தனர்.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் தமிழ் செல்வி ராஜா மற்றும் தமிழ்ச்செல்வி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா கோபாலகிருஷ்ணன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரம்யா ஐயப்பன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் மன்மதன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அப்பகுதி பொதுமக்களினை ஏராளமானோர் கலந்து கொண்டு வெகு சிறப்பாக பள்ளிவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.