இந்திய நாடாளுமன்ற தேர்தலின் ஒரு பகுதியாக, 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இந்த 102 தொகுதிகளிலும் மாலை 5 மணி நிலவரப்படி 59.66 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதுவரை கிடைத்த தரவுகளின்படி திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, மேற்கு வங்கத்தில் 77.57% வாக்குகளும், திரிபுராவில் 76.10% வாக்குகளும் பதிவாகியிருந்தன.
உத்தரப் பிரதேசத்தில் 53.56 சதவீத வாக்குகளும், ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற்ற உதம்பூர் தொகுதியில் 65.08 சதவீத வாக்குகளும், மத்தியப் பிரதேசத்தில் 63.25 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
பீகாரில் 46.32 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.
மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாயின.