Neet 2024
Neet 2024

நீட் 2024: நீட் நுழைவு தேர்வு நாளை தொடக்கம்

5/5 - (7 votes)

2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை தொடங்கவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வை ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மே 5ஆம் தேதியான நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடத்த உள்ளது.

இதற்கான அனுமதி அட்டைகள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியுடன் இணையதளத்தில் லாகின் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்களே! ஆல் தி பெஸ்ட்!

நீட் தேர்வு

இந்நிலையில் நாளை நடத்தப்படும் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மதியம் 1.30 மணிக்குள் மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களுக்குள் வந்து விட வேண்டும் என்றும், அதனின் மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என NTA அறிவுறுத்தியுள்ளது. நாளை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ட்ரெஸ் கோட் எனப்படும் ஆடை கட்டுப்பாடும் என்டிஏ சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட்

நாடு முழுவதும் 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெறுகிறது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தவர்களில் 95% மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய தேர்வு முகமை

தேர்வை எழுதும் மாணவர்கள் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது மதியம் 12 மணிக்கு தேர்வு மையங்களுக்கு வந்து விட வேண்டும் அனைத்து மாணவர்களும் கடுமையான சோதனைகளுக்கு பிறகு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் பெண் மாணவர்களை பெண் பணியாளர்கள் மூடப்பட்ட அறைகளில் சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது மேலும் தேர்வின் முதல் ஒரு மணி நேரத்திலும் கடைசி அரை மணி நேரத்திலும் பயோ பிரேக் எதுவும் அனுமதிக்கப்படவில்லை எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. முறைகேடுகளை தவிர்க்க பயோமெட்ரிக் ஆட்டோமேட்டிகேசன் முறையையும் தேசிய தேர்வு முகமை கடைபிடிக்கிறது இந்த நிலையில் நீட் தேர்வின் போது என்டிஏ சொல்லியுள்ள ஆடை கட்டுப்பாடுகள் உள்ளிட்ட விஷயங்களை பார்க்கலாம்:-

செய்யக் கூடாதவை

  • நீண்ட கைகளுடன் கூடிய ஆடைகள் அணிந்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படாது. எனவே அரைக்கை சட்டை அணிந்து செல்ல வேண்டும்
  • ஹீல்ஸ் இல்லாத செருப்புகள் மற்றும் ஷூக்கள் மட்டுமே அணிந்து செல்ல வேண்டும்( ஹீல்ஸ் இருக்கும் ஷூக்களுக்கு அனுமதி வழங்கப்படாது)
  • பர்சுகள், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட், தொப்பி போன்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை
  • கைக்கடிகாரம், வளையல், கேமரா, ஆபரணங்கள், மற்றும் உலோக பொருட்களும் தடை செய்யப்பட்டு இருக்கின்றன
  • மின்னணு சாதனங்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு அனுமதி இல்லை.

கொண்டு செல்ல வேண்டியவை

  • நீட் யுஜி 2022 அட்மிட் கார்டு
  • தேர்வு மைய விவரங்கள்
  • பயோடேட்டா
  • உறுதிமொழி படிவம்
  • அஞ்சலட்டை அளவு புகைப்படம்
  • புகைப்பட அடையாளச் சான்று ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம்