Langval Mall

தஞ்சாவூர் கலரே மாறுதே மத்திய தமிழ்நாட்டிற்கு வருகிறது முதல் ஷாப்பிங் மால்

5/5 - (5 votes)

மத்திய தமிழ்நாடு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் மாபெரும் ஷாப்பிங் மால் ஒன்று அமைய உள்ளது.

“லாங்வால் மால்” (Langval Mall) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஷாப்பிங் மால், தஞ்சாவூரில் விரைவில் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்பட இருக்கிறது. இதுவே மத்திய தமிழ்நாட்டின் முதல் ஷாப்பிங் மால் ஆகும்.

தமிழ்நாட்டின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட மாவட்டங்கள், நகரங்கள் வளர்ச்சி அடைகிறது, என்பதற்கு மிக முக்கியமான விஷயமாக இந்த மால் கலாச்சாரம் பார்க்கப்படுகிறது. பொருளாதாரம், வர்த்தக ரீதியில் வளர்ச்சி அடையும் பகுதிகளில் மட்டும் வரும் மால்கள் தற்போது தஞ்சாவூரில் வர உள்ளது. மக்களின் பொழுதுபோக்கு தளம்: லாங்வால் மால் என்பது தஞ்சாவூர் மக்களின் பொழுதுபோக்கு மற்றும் ஷாப்பிங் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு முழுமையான தளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாப்பிங் மட்டுமின்றி, பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபலமான கடைகள் மற்றும் பிராண்டுகள்: இந்த ஷாப்பிங் மாலில் பல்வேறு பிரபலமான கடைகள் மற்றும் பிராண்டுகள் இடம் பெறவுள்ளன. இதில் சில முன்னணி நிறுவனங்களின் பெயர்கள்:

முன்னணி நிறுவனங்கள்கடைகள்
பீ.வி.ஆர் (PVR)திரையரங்கம்
மாக்ஸ் (Max)ஆடை
கிராக்ஸ் (Crocs)காலணிகள்
லெவிஸ் (Levis)ஆடை
பேசிக்ஸ் (Basics)ஆடை
மினிசோ (Miniso)லைஃப்ஸ்டைல் தயாரிப்புகள்
சோச் (Soch)பெண்களுக்கான ஆடை
பர்கர் கிங் (Burger King)ஃபாஸ்ட் ஃபுட் உணவகம்

இதுபோன்ற பல பிரபலமான கடைகள் மற்றும் பிராண்டுகள் இந்த ஷாப்பிங் மாலில் இடம் பெற இருப்பதால், தஞ்சாவூர் மக்கள் ஷாப்பிங் செய்வதற்கும், பொழுதுபோக்கிற்குச் சிறந்த இடமாக இது மாறும் என்று நம்பப்படுகிறது.

தஞ்சாவூர் நகர வளர்ச்சிக்கு புதிய உந்துசக்தி. தஞ்சாவூர் நகரின் வளர்ச்சிக்கு இந்த லாங்வால் மால் நிச்சயமாக உந்துதலை அளிக்கும். ஷாப்பிங் மால் வருவதால் தஞ்சை-க்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் இந்த மால் கவரும். இதேபோல் தஞ்சாவூரை சுற்றியுள்ள சிறு டவுன், கிராம மக்களையும் இந்த மால் பெரிய அளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த ஷாப்பிங் மாலில் பல்வேறு கடைகளுக்காக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதன் மூலம் தஞ்சாவூர் மக்களின் வாழ்வாதாரம், வர்த்தகம் மேம்படும். மொத்தத்தில், தஞ்சாவூரில் கட்டப்பட்டு வரும் லாங்வால் மால், அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, தஞ்சாவூர் நகரின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post