சென்னை லூலூ மால்: தமிழ்நாட்டில் லூலூ மால் கட்டப்படும் இடம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் விரைவில் இந்த மால் எங்கே கட்டப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் லூலூ மால் எங்கே கட்டப்படுகிறது தெரியுமா? சர்ப்ரைஸ் இடம்.. இது லிஸ்டுலேயே இல்லையே!
கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் சென்றார். துபாயில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்புகளை மேற்கொண்டார். துபாயில் நடந்த உலக அளவிலான எக்ஸ்போவில் தமிழ்நாட்டின் அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது . தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு முதலீடுகள் இந்த பயணத்தின் போது ஈர்க்கப்பட்டது.
இந்த பயணத்தின் ஒரு கட்டமாக லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் உணவு பதனிடும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. கிட்டத்தட்ட 3000 ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் இரண்டு மால்களை அமைக்கவும் லூலூ நிறுவனம் முடிவு செய்ததாக கூறப்பட்டது.
லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவர் யூசுப் அலி முஸலிமான் வீட்டில் அப்துல் காதருடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சந்திப்பு நடத்தினார். இதை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கேரளா மற்றும் பெங்களூரில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்தி வந்த அந்த நிறுவனம் தமிழ்நாடு பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளது. இவர்கள் ஏற்கனவே கேரளா, பெங்களூரில் மால்களை வைத்து உள்ளனர்.
தமிழ்மட்டில் லுலு குழுமம், ஷாப்பிங் மால்கள், ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்றவற்றை அமைக்க ரூ.3,500 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளன.அடுத்த வருடம் இவர்களின் மால் சென்னையில் திறக்கப்பட உள்ளது. அதே சமயம் ஹைப்பர் மால் கோவையில் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது.
லுலு குழுமத்தின் முன்மொழியப்பட்ட மெகா மால் திட்டம் ஒரு காலத்தில் சென்னையின் அடையாளமான ‘பிரார்த்தனா டிரைவ்-இன்’ ECR இல் இருந்த இடத்தில் வரும். ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த மால் டெவலப்பர் நிறுவனம் தமிழகத்தில் ரூ.3000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
லுலு குழுமம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உணவு பதப்படுத்துதல் மற்றும் தளவாட மையத்தையும் தமிழ்நாட்டில் அமைக்கும். நிறுவனத்தில் இருந்து உயர்மட்டக் குழு விரைவில் மாநிலத்திற்கு வருகை தந்து, இடங்கள் மற்றும் தொடர்புடைய ஆலோசனைகளை மேற்கொண்டு முதலீடு செய்யப்படும் இடத்தை இறுதி செய்யும்.
இந்த நிலையில்தான் பாஷ்யம் குழுமத்துடன் இணைந்து ECR இல் லூலூ மால் அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அங்கே இருக்கும் பிரார்த்தனா தியேட்டர் சமீபத்தில் பாஷ்யம் மூலம் வாங்கப்பட்டது.. அந்த திறந்தவெளி தியேட்டர் இடிக்கப்பட்டது. ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில், மகாபலிபுரம் செல்லும் வழியில், 29 ஏக்கர் நிலம், பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு, இடிக்கும் பணி ஏற்கனவே துவங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ₹550 கோடிக்கு மேல் என்று ரியல் எஸ்டேட் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இங்குதான் அந்த மால் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இங்கே மிகப்பெரிய குடியிருப்பும் அமைக்கப்பட உள்ளது. அதன் அருகிலேயே லூலு மால் அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.