Election 2024
Election 2024

இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யும் நட்சத்திர வேட்பாளர்கள்

5/5 - (1 vote)

தமிழ்நாட்டில் நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முக்கியமான வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இருக்கின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சியினர் அறிவித்து களமிறக்கியுள்ளனர். அதிமுகவில் அறிவிக்கப்பட்ட 33 வேட்பாளர்களும் இன்று பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய அக்கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.

இது போல விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் ராணியும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார். தலைநகர் சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளும் மிகமுக்கிய கவனம் பெற்றுள்ளது. கடந்த முறை போட்டியிட்ட 3 பேரையும் திமுக மீண்டும் களமிறக்கியுள்ளது.

கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் இன்று தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இருக்கின்றனர்.

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன், விருதுநகரில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் பாமக சார்பில் தருமபுரி வேட்பாளர் சவுமியா அன்புமணியும் இன்று தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இருக்கின்றனர்.

20 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் வரும் 27 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.

வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் ஜூன் மாதம் 4 ஆம் தேதி எண்ணப்பட இருக்கிறது.