God Light
God Light

ஆன்மீகம் புதன்: புதன்கிழமை ஏற்ற வேண்டிய விளக்கு

Rate this post

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது இந்த பழமொழியை அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். புதன்கிழமைக்கு இருக்கும் மகத்துவத்தை எடுத்துச் சொல்லும் விதமாக இது அமைந்திருக்கும். அத்தகைய அற்புதமான புதன் கிழமையை நம்முடைய செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளவும் நினைத்தது நடக்கவும் புதன்கிழமை அன்று நாம் செய்யக் கூடிய பூஜை பற்றியும் ஏற்றக் கூடிய தீபத்தை பற்றியும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்கிறோம்.

புதன்: புதன்கிழமை அன்று இருபத்து மூன்று தீபங்கள் ஏற்றி, அரிசி மாவுக் கோலத்தில் இரட்டைச் சங்கு வரைந்து அதன் மேல் சுற்றியும் தீபங்களை ஏற்றலாம். நல்ல எண்ணெய் தீபங்கள் ஏற்றுவது சிறந்தது.

புதன்கிழமை ஏற்ற வேண்டிய தீபம் பொதுவாக வீட்டில் பூஜை பொருட்களை சுத்தப்படுத்துவது செவ்வாய் வெள்ளி அன்று செய்ய மாட்டார்கள். ஏனெனில் அன்றைய தினம் இவற்றை சுத்தம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைந்து விடும் என்பது ஐதீகம். அதே போல் காமாட்சி அம்மன் விளக்கு புதன்கிழமை அன்று தேய்க்க கூடாது என்று சொல்லப்படுகிறது.

ஏனெனில் புதன் ஆனது பொன்னையும் பொருளையும் நமக்கு கொடுக்கக் கூடிய நாள். அன்றைய நாளில் இந்த விளக்கை தேய்க்கும் போது வீட்டில் செல்வ கடாக்ஷம் குறையும். அப்படி இருக்கையில் அந்த புதன்கிழமையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிபடும் போது நம்முடைய செல்வ வளத்தையும் பெருக்கிக் கொள்ளலாம் அது எப்படி என்று பதிவை தொடர்ந்து பார்க்கலாம்.

புதன்கிழமையில் இந்த காமாட்சி அம்மன் விளக்கு மீது ஜவ்வாது தேய்த்து விடுங்கள். அதன் பிறகு சந்தன குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள். ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து அதை சுற்றிலும் மாவிலை அழகாக அடுக்கிக் கொள்ளுங்கள். அந்த மாவிலையிலும் சந்தன பொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

மாவிளைக்கு மேல் ஒவ்வொரு இலையிலும் பூக்களையும் அலங்காரத்திற்கு வைத்து விடுங்கள்.இப்போது தட்டில் நடுவில் காமாட்சி அம்மன் விளக்கை வைத்து விளக்கிற்கும் நறுமணம் மிக்க மலர்களை வைத்து விளக்கை அழகாக அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு விளக்கில் விளக்கெண்ணெயும், சிறிதளவு நெய்யும் ஊற்றி சிகப்பு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் ஏற்றும் பொழுது சர்வமங்கள மாங்கல்யே ஷிவே! ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ரயம்பகே தேவி! நாராயணி! நமோஸ்து தே!என்ற இந்த மந்திரத்தை சொல்லியவாறு ஏற்றுங்கள். அதன் பிறகு இந்த விளக்கின் முன் அமர்ந்து உங்களுக்கு என்ன தேவையோ அதை காமாட்சி அம்மனிடம் மனதார கேளுங்கள். இந்த விளக்கு நம்முடைய குலத்தை காக்கக் கூடிய விளக்காக கருதப்படுகிறது.

அத்தகைய விளக்கின் முன் நாம் அமர்ந்து நம்முடைய வேண்டுதலை சொல்லும் போது அதை நிறைவேற்றி தருவதற்கான அனுகூலத்தை நிச்சயமாக தரும் என்று நம்பப்படுகிறது. இதில் விளக்கு எரியும் திசையை வைத்தே நம்முடைய காரியங்கள் வெற்றி அடையுமா? அடையாதா? என்பதை கூட கணிக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

அந்த அளவிற்கு துல்லியமாக நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றக் கூடிய இந்த தீப வழிபாட்டை செய்து உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *