தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கீ. மீ தொலைவில் அமைந்துள்ளது சுருளி மலை. இது தமிழகத்தில் முக்கிய ஆன்மீக தளமாக பார்க்கப் படுகிறது. இந்த சுருளி மலையில் 40 அடியில் அருவி உள்ளது, இதற்கு சுருளி அருவி என பெயர் உண்டு. இந்த சுருளி மலை ஆன்மீகத்தில் மட்டும் பெயர் போனது அல்ல, மிக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாகவும் உள்ளது.
இந்த சுருளி மலையில், கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோயில் உள்ளது. தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலம் நிறுவப்பட்டுள்ள இந்தக் கோயிலில் ஆயிரக்காணக்கான லிங்கங்கள் உள்ளது. இந்த லிங்கங்கள் அனைத்தும் பக்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை ஆகும். இந்த லிங்கங்கள் இங்கயே செய்து பக்தர்களால் பிரதிஷ்டை செய்வது வழக்கம். தற்போது ஆயிரத்திற்கு மேற்பட்ட லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்படுள்ளது. மேலும் இந்த ஆலயத்தில் 72 அடியில் பிரம்மாண்ட லிங்கம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு எப்போதும் அமைதியான சூழலே காணப்படுகிறது. தியானத்தை விரும்புவோற்கு போதி மரம் என்றால் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஸ்ரீ கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி ஆலயம் என்றே சொல்லலாம். இங்கு தியானம் செய்வதற்கு என்று பல சித்தர்களின் சிலைகள் செதுக்கப்படுள்ளது. மேலும் இங்கு கூடுதலாக ,புத்தர், விவேகானந்தர், வள்ளலார் சிலைகள் உள்ளதால் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிட தக்கது.
Pingback: வாட்ஸ்அப் மோசடி எச்சரிக்கை: இப்படி மெசேஜ் வந்தால் உடனே பிளாக் செய்யுங்கள் | செய்திகள் Latest News Stories fro