IPL Commentary List
IPL Commentary List

IPL 2024: ஐபிஎல் 2024 எந்த மொழிகளில் யார் யார் கமெண்ட்ரி செய்ய இருக்கிறார்கள்

5/5 - (2 votes)

IPL 2024 வர்ணனையாளர்களின் பட்டியல்

ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு இன்னும் ஒரு நாளே உள்ளது. போட்டியுடன் உங்களை கமெண்ட்ரியில் குதூகலப்படுத்த பல ஜாம்பவான்கள் கமெண்ட்ரி பாக்ஸில் களமிறங்கவுள்ளனர். கமெண்ட்ரிக்கு பெயர்பொன முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து போன்றவர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் எந்த மொழிகளில் யார் யார் கமெண்ட்ரி செய்ய இருக்கிறார்கள் என்ற முழு பட்டியலையும் இங்கே பார்க்கலாம்.

இந்தி கமெண்ட்ரி குழு

சுனில் கவாஸ்கர், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், முகமது கைஃப் மற்றும் அஞ்சும் சோப்ரா ஆகியோர் ஐபிஎல் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸின் இந்தி கமெண்ட்ரி குழுவில் இடம் பெற்றுள்ளன. அதேபோல், ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ லைவ் ஸ்ட்ரீமிங் பார்ட்னர் ஜியோ சினிமாவை ஹிந்தி கமெண்ட்ரி குழுவில் ஜாகீர் கான், சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் படேல், ஆர்.பி. சிங், பிரக்யான் ஓஜா, ஆகாஷ் சோப்ரா, நிகில் சோப்ரா, சபா கரீம், அனந்த் தியாகி மற்றும் ரிதிமா பதக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஸ்டார் ஸ்போர்ட்ஸின் இந்தி கமெண்ட்ரி குழுவில் மேலும் சிலர்.. இர்பான் பதான், அம்பதி ராயுடு, வருண் ஆரோன், மிதாலி ராஜ், முகமது கைஃப், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இம்ரான் தாஹிர், வாசிம் ஜாபர், குர்கீரத் மான், உன்முக்த் சந்த், ஜதின் சப்ரு, ரஜத் பாட்டியா, தீப் தாஸ்குப்தா, ராமன் பானோட், பத்மஜீத் செஹ்ராவத் ஆகியோர் உள்ளனர்.

ஆங்கில கமெண்ட்ரி

ஆங்கில கமெண்ட்ரி குழுவில் யார் யார்..? ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆங்கில கமெண்ட்ரி குழுவில் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, ஹர்ஷா போக்லே, தீப் தாஸ்குப்தா, அஞ்சும் சோப்ரா, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், பிரையன் லாரா, கெவின் பீட்டர்சன், மேத்யூ ஹைடன், மைக்கேல் கிளார்க், ஆரோன் பின்ச், கிறிஸ் மோரிஸ், இயன் பிஷப், நிக் நைட், மோரிசன், ரோஹன் கவாஸ்கர், ம்புமெலெலோ எம்பாங்வா, முரளி கார்த்திக், மார்க் ஹோவர்ட், நடாலி ஜெர்மானோஸ், சைமன் கடிச், சாமுவேல் பத்ரீ மற்றும் டேரன் கங்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஜியோ சினிமா

ஜியோ சினிமாவின் ஆங்கில கமெண்ரி குழுவில் கிறிஸ் கெய்ல், ஏபி டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன், இயான் மோர்கன், பிரட் லீ, மைக் ஹெசன், அனில் கும்ப்ளே, ராபின் உத்தப்பா, கிரேம் ஸ்மித், ஸ்காட் ஸ்டைரிஸ், சஞ்சனா கணேசன் மற்றும் சுஹைல் சந்தோக் இடம் பெற்றுள்ளனர்.

வர்ணனை மொழிவர்ணனையாளர்கள் பெயர் பட்டியல்
மராத்திசினேகல் பிரதான், குணால் தேதி, பிரசன்னா சாந்த், சந்தீப் பாட்டீல், சைதன்யா சாந்த்
தமிழ்கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஆர்ஜே பாலாஜி, ஆர்.கே.பாவ்னா, சுப்ரமணியன் பத்ரிநாத், சடகோபன் ரமேஷ், அபினவ் முகுந்த், நானி
கன்னடம்விஜய் பரத்வாஜ், ரூபேஷ் ஷெட்டி, ஜி.கே.அனில் குமார், ஸ்ரீநிவாச மூர்த்தி பி, பரத் சிப்லி, பவன் தேஷ்பாண்டே, குண்டப்பா விஸ்வநாத், சுமேஷ் கோனி
தெலுங்குரவி ராக்லே, வேணுகோபால் ராவ், டி சுமன், கௌசிக் என்.சி, கல்யாண் கிருஷ்ணா டி, ஆஷிஷ் ரெட்டி, எம்எஸ்கே பிரசாத்
போஜ்புரிமுகமது சைஃப், குலாம் உசேன், சினே உபாத்யாய், சத்ய பிரகாஷ், சிவம் சிங், டிம்பால் சிங், சௌரப் வர்மா, ரவி கிஷன், குணால் ஆதித்யா சிங், விஷால் ஆதித்யா சிங்
மலையாளம்ஷியாஸ் முகமது, விஷ்ணு ஹரிஹரன், ரைபி கோம்ஸ், சி எம் தீபக், டினு யோஹன்னன்
பெங்காலிசரதிந்து முகர்ஜி, கௌதம் பட்டாச்சார்யா, தேபாசிஷ் தத்தா, சஞ்சீப் முகர்ஜி, ஜாய்தீப் முகர்ஜி