நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியும், மக்கள் தொகையும் பெருகிவரும் நிலையில் குற்றங்களும் அதிகரித்து கொண்டே உள்ளது. பெரும்பாலும் தற்போது குற்றங்கள் இணையவழியில் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.
இணைய வழி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களை இணைய வழி (cyber crime) குற்றங்கள் என வகைப்படுத்தப்படுகிறது. இம்மாதிரியான குற்றங்கள் இணையவழியில் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. பெரும்பாலும் இவ்விதமான குற்றங்கள் மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப பணங்களை அழிப்பதாக கூறியும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இம்மாதிரியான குற்றங்கள் பெருநகரங்களிலும் கிராமங்களிலும் பெரும்பாலும் தற்போது நடைபெற்று வருகிறது.
இணைய வழி நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கும் குற்றங்களிலிருந்து விரைவில் தீர்வு காணும் வகையில் நாட்டில் சைபர் கிரைம் குற்றங்களை பதிவு செய்து உரிய தீர்வு காணும் வகையில் www.cybercrime.gov.in சைபர் கிரைம் என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. மேலும் இலவச சைபர் கிரைம் குற்றப்பதிவு அலைபேசி எண்ணாக 1930 எண் செயல்பட்டு வருகிறது.
இதனை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையிலும் இணையவழி(cyber crime) குற்றங்களிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும் திருவாரூர் மாவட்ட இணையவழி குற்ற காவல்துறை சார்பாகவும் நியூ பாரத் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
இப்பேரணியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களிடையே சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து உரையாற்றினார்.
பின்னர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவியர் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாகச் சென்றனர்.
Pingback: அரசு அதிகாரிகளை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின் பதக்கங்கள் வழங்கி சிறப்பிப்பு | செய்திகள்