கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது, இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்துத் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான போட்டோவை தனுஷ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் தனுஷின் நடிப்பில் பொங்கலுக்கு வெளியானத் திரைப்படம் கேப்டன் மில்லர். இத்திரைப்படத்தில் தனுஷ் மூன்று விதமான கெட்டப்பில் நடித்து அசத்தி இருந்தார். படத்தின் மொத்த கதையையும் தனுஷ் தனது தோளில் சுமந்து நடித்திருந்தார். இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும், படம் கணிசமான வசூலை அள்ளியது.
கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து, தனுஷின் 51வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இப்படத்தில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகர்ஜூர்னா முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துத் வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
தனுஷின் 51வது படமான இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்ட நிலையில், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அல்பிரி பகுதியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. படப்பிடிப்பு நடைபெறும் பகுதியில் போக்குவரத்துத் இடையூறு ஏற்பட்டட் தால் வாகனங்கள் மாற்றுப்பதையில் திருப்பிவிடப்படடன. இதன் காரணமாக படக்குழு மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் காரணமாகவும், படப்பிடிப்புக்கு வழங்கப்பட்ட அனுமதியை திருப்பதி போலீசார் ரத்து செய்தனர். படப்பிடிப்பு ரத்தானதால், அடுத்து படப்பிடிப்பை எங்கு நடத்துவது என்று படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், திருப்பதி அல்பிரியில் நடந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், தனுஷ், தலைமுடி களைந்து, தாடி,அழுக்கு உடையுடன் பிச்சைக்காரனாக அதுவும் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு நடுரோட்டில் நிற்கிறார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், அசல் பிச்சைக்காரன் கெட்டப் என்றும், தனுஷின் 51 படம் வேறலெவலில் இருக்கும் போல என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும்,படத்தின் பர்ஸ்ட் லுக்கே வெளியாகாத நிலையுல் தனுஷின், நியூ லுக் லீக்கானதால் படக்குழுவினர் மற்றும் தனுஷின் ரசிகர்கள் டென்ஷன் ஆனார்கள்.