மாதம்தோறும் மாதத்தின் இறுதி வாரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29.02.2024-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
மாதத்தின் இறுதி வாரத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக கேட்டறிந்து விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறும். இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.
தேதி | நேரம் | இடம் |
---|---|---|
29.02.2024 | காலை 10.30 மணி | திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கு |