திருவாரூர் மாவட்டத்தில் இந்த கோயில் கந்தா ரன்னியம் என்ற பெயராலும் சந்தனக்காடு என்ற பெயராலும் ஸ்ரீவாஞ்சியம் என அழைக்கப்படுகிறது. சிவபெருமானாகிய வஞ்சை நாதர் நான்கு யுகங்களாக இவ்வாலையத்தில் உள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன.
வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் காசிக்கு நிகரான புண்ணிய ஷேத்திரமாக உள்ளது. இவ்வாலயம் நன்னிலத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும், ஐவரால் பாடப் பெற்ற ஸ்தலமாக திகழ்கிறது . அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் என ஐவரால் ஆடல் பெற்ற ஸ்தலமாக திகழ்கிறது.
இந்த ஆலயத்தின் ஸ்தல விருட்சமாக சந்தன மரமும், வன்னி மரமும் திகழ்கிறது. இந்த புண்ணிய ஸ்தலத்தில் ராகுவும், கேதுவும் ஒரு உடல் கொண்டு காட்சியளிக்கின்றனர் மேலும் சூரியன் பகவானும், சனி பகவானும் பைரவர் அமர்ந்த கோலத்தில் யோக பைரவர் ஆக காட்சியளிக்கிறார்.
தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத மிகச் சிறப்பு வாய்ந்த ஆலயமான ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி ஆலயத்தில் எமதர்மன் சன்னதி அமைந்துள்ளது, இங்கு எமதர்மனும், சித்திரகுப்தரும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
இந்த ஆலயத்தின் அம்பாள் வாழ வந்த நாயகி, மறுவாழ் குழலி, மங்களாம்பிகை நாயகி என்ற சிறப்பு பெயரால் போற்றப்படுகிறார்.
இங்கு வழிபட்டு புண்ணியம் பெற்றவர்கள் எமன், பிரம்மா, சப்தரிஷிகள், அக்கினி பகவான், வேத கண்ணிகள், சங்க பாலன், (வாசுகி) எனக் கூடிய நாகம், பைரவர், கமல முனி, ரிஷிகள் இவர்களால் சிவன் அருள் பெற்றவர்கள்.
மேலும் இந்த ஆலயத்தின் வரலாறாக ராமபிரான் ராவணனை வதம் செய்ததற்காக ராமேஸ்வரத்தை அமைத்து புண்ணிய தீர்த்தத்தில் நீர் ஆடியதாகவும் , அதே போல் எமன் உயிர்களை வதம் செய்வதையே தொழிலாக கொண்டு இருக்கும் எமனை புண்ணியம் செய்ய பூலோகத்தில் உள்ள கைலாயத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்று ஈசன் கூறியதாகவும் ஆகையால் எமன் இந்த ஆலயத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்து பாவ விமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலயத்தில் மாசி மாசத்தில் பரணி நட்சத்திரத்தில் எமதர்மனுக்கு காட்சியளிக்கிறார்.
எமதர்மனுக்கு பாவ விமோசனம் வழங்கிய இந்த ஆலயத்தில் சிவபெருமானை தன் தோளில் சுமந்து எமதர்மன் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
இந்த ஆலயத்தில் முக்கிய வழிபாட்டு நாட்களாக வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை சிறப்பான பூஜைகளுடன் நடைபெற்று வருகிறது. மேலும் ஆண்டின் சிறப்பாக கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பாளையத்தில் உள்ள குப்த கங்கை குளத்தில் நீராடி இறைவனை வழிபடுதல் சிறப்பாகும். மேலும் மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் நடைபெறும் மகத்தினை தீர்த்த வாரிகள் நிகழ்ச்சி.
இந்த ஆலயம் தினந்தோறும் காலையில் 5.30 மணிக்கு ஆலய நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணி வரையிலும் மேலும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8:30 மணி வரையிலும் கோவில் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறக்கப்படுகிறது.
இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வந்தால் காசிக்கு நூறு முறை சென்றதற்கு சமம் என்ற சிறப்புக் கொண்ட ஆலயமாக உள்ளது.
Comments are closed