சிவனை வழிபட்டு சிவனின் அருளை பெறுவதற்கு ஈடு இணையற்ற தினமாக பிரதோஷம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் திரியோதசி தினத்தில் வருவது பிரதோஷ தினமாகும்.
ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷம் ஆதி பிரதோஷம் என்றும், திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சோமவார பிரதோஷம் என்றும், செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷம் மங்கள வார பிரதோஷம் என்றும், புதன்கிழமை வரும் பிரதோஷம் புதவார பிரதோஷம் என்றும், வியாழக்கிழமை வரும் பிரதோஷம் குருவார பிரதோஷம் என்றும், வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷம் சுக்ர வார பிரதோஷம் என்றும், சனிக்கிழமை வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.
மாசி புதவார பிரதோஷம் வாழ்வில் கஷ்டங்கள் அனைத்தும் நீங்க.. இந்நாளை தவறவிடாதீர்கள்..!!
அந்த வகையில் இன்று புதவார பிரதோஷம் ஆகும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இத்தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, நன்மைகள் பெருகும். மாசி மாதம் கடவுள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மாதமாகும். எனவே, இம்மாதத்தில் வரும் புதவார பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
பிரதோஷ வழிபாடு:
இத்தினத்தில் சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமர்சையாக நடைபெறும். அபிஷேகத்திற்கு தேவையான அருகம்புல், வில்வ மாலை, பால், தயிர், தேன் போன்றவற்றை கொடுத்தும், நெய் விளக்கேற்றி வழிபட்டும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளலாம்.
இந்த புதவார பிரதோஷத்தில் நீங்கள் வீட்டில் வழிபடுவதும் மிக அவசியமானதாகும். பூஜைகள் முடிந்தபிறகு வீட்டில் நெய் விளக்கேற்றி, தயிர் சாதத்தை நைவேத்தியமாக வைத்து சிவபெருமானை மனதார நினைத்து வேண்டுதல்களை சொல்லி வழிபட வேண்டும்.
பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜெபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். சிவ ஸ்லோகங்கள், சிவ புராணம் ஆகியவற்றை படிக்கலாம்.
பலன்கள்:
- இந்த மாசி புதவார பிரதோஷத்தில் சிவபெருமானையும், நந்தி பகவானையும் வழிபடுவதால் 16 வகையான செல்வங்களையும் பெறலாம்.
- வீட்டில் ஏற்படும் சுபகாரிய தடைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.
- நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இப்பிரதோஷத்தில் சிவனை வழிபட நன்மை உண்டாகும்.
- மேலும், திருமணம் கைகூடும், வறுமை விலகும், தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனைகள் தீரும், பகைகள் விலகும், நோய்கள் நீங்கும் மற்றும் போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.
Comments are closed