திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 73-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
#COLLECTORTHIRUVARUR, #PROTHIRUVARUR, #THIRUVARUR pic.twitter.com/7xdQg5fDfr
— Collector Tiruvarur (@CollectorTVR) January 26, 2024
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக விளையாட்டு மைதானத்தில் 73-வது குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன், திருவாரூர் ஒன்றி ய குழுத்தலைவர் தேவா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வருவாய் துறையின் கீழ் 250 பேருக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான முதியோர் உதவித் தொகைக்கான ஆணை, விதவை உதவித் தொகைக்கான ஆணை, கணவரால் கைவிடப்பட்டோர் உ தவித் தொகைக்கான ஆணை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 7 பேருக்கு ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்து 762 மதிப்பிலான திருமண நிதி உதவி உள்ளிட்ட 257 பேருக்கு 32 லட்சத்து 65 ஆயிரத்து 762 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.