Nayanthara Beyond The Fairytale
Nayanthara Beyond The Fairytale

நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல் விமர்சனம்

5/5 (10)

அமித் கிருஷ்ணன் இதை இயக்கியிருக்கிறார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்குக் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு நயன்தாராவின் முழு சினிமா பக்கத்தை அலசுவதாக இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இதில் நயன்தாரா, “மற்றவரின் சந்தோஷத்தைப் பார்த்து மக்களும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் உணர வேண்டும் என்பதே என் எண்ணம்!” என ஒரு வசனத்தைக் கூறுகிறார். இந்தக் கூற்றை நியாயம் செய்யும் விதமாக அவருடைய மகிழ்ச்சியான கதைகள் நமக்கு மகிழ்ச்சியை தந்ததா, நயன்தாரா பற்றிய முழுமையான படமாக இது இருந்ததா என்பதைப் பார்க்கலாம்.

ஒரு நாயகிக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது. அந்த வாய்ப்பு இந்த `லேடி சூப்பர் ஸ்டாருக்கு’ கிடைத்தது.

நயன்தாரவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது `நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற ஆவணப்படம்.

நயன்தாரா கூறும் விஷயங்களிலிருந்து ‘நிகழ்காலம் டு ஃபிளாஷ்பேக்’ சென்று ஒவ்வொன்றாக அலசுவது என மென்மையாகத் தொடங்குகிறது படம். கன்னட நடிகர் உபேந்திரா, நடிகர் நாகர்ஜுனா, இயக்குநர் விஷ்ணு வரதன், அட்லீ, ராதிகா சரத்குமார் என சினிமா நட்சத்திரங்களின் பேட்டியும் இந்த ஆவணப்படத்தில் அடங்கியிருக்கிறது.

சினிமா மீது ஆர்வமில்லாத பெண்ணாக இருக்கும் டயானா, நயன்தாராவாக உருவெடுத்தது தொடர்பாக நயன்தாரவை அறிமுகப்படுத்திய இயக்குநர் சத்யன் அந்திக்காடு எடுத்துச் சொல்கிறார். இரண்டாவது திரைப்படமே உச்ச நடிகருடன் நடிக்கும் வாய்ப்பெல்லாம் ஒரு நாயகிக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது. அந்த வாய்ப்பு இந்த `லேடி சூப்பர் ஸ்டாருக்கு’ கிடைத்தது.

அது பற்றியும் சுவரஸ்யமான தொனியில் தேவையான விஷயங்களை மட்டும் சொல்கிறார் இயக்குநர் சத்யன் அந்திக்காடு. `கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான `ஐயா’ படத்தின் மூலம்தான் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் நயன்தாரா.

அவரின் வசீகரிக்கும் முகம் குறித்தும் அவரின் நடிப்பு குறித்தும் பல சுவாரஸ்யங்களை கூறுகிறார் கே. பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி. இப்படியான நல்ல தொடக்கத்தைக் கொண்ட இந்த ஆவணப்படம் அடுத்தடுத்து மேடு பள்ளங்களில் ஏறவும் இறங்கவும் செய்கிறது. மல்லுவுட்டைப் போலத் தமிழிலும் இரண்டாவது திரைப்படத்திலேயே உச்ச நட்சத்திரமான ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவுக்குக் கிடைக்கிறது.

இதனைத் தொடர்ந்து `கஜினி’ திரைப்படத்தில் இவருடைய தோற்றம் குறித்த எழுந்த உருவக்கேலிகள் தொடர்பாகவும் நயன்தாரா இதில் பேசியிருக்கிறார். தனது இரண்டாவது தமிழ்ப் படத்திலேயே உச்ச நட்சத்திரமான ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு குறித்தான விஷயங்களைத் தெரிந்து கொள்ள பெரும்பாலானோருக்கு விருப்பமாக இருக்கும். ஆனால், அது பற்றி விரிவாக எடுத்துரைக்காமல் அரக்க பறக்கச் சென்ற விதம் ஏமாற்றமளிக்கிற. `கஜினி’ திரைப்படத்திற்காக எழுந்த உருவக்கேலிகளை எப்படிக் கையாண்டார் என்பது குறித்தும் மேம்போக்காகவே சொல்லப்பட்டிருக்கிறது.

`பில்லா’ கதாபாத்திரம் குறித்து அனல் பறக்கும் கதைகளை எடுத்துக் கூறிய இந்த ஆவணப்படம் நயன்தாராவின் அடுத்தடுத்த பயணங்கள் மீதும் ஆழமாகக் கவனம் செலுத்தியிருக்கலாம். சினிமாவிலிருந்து விலக நினைத்தது எதற்கு, அதற்கு காரணமானவர் யார் என விவரிப்பதெல்லாம் ஓகே! ஆனால், இதனைத் தொடர்ந்து வரும் பல கதைகளும் அத்தனைத் தெளிவில்லாத பாலிஷ்டு வெர்ஷனே! அதிலும் முக்கியமாக அக்காட்சிகளைக் கையாண்ட விதமும் பொறுமையைச் சோதிக்கிறது.

இதன் பிறகு நேரடியாக `நானும் ரெளடிதான்’ திரைப்படம் அவர்களுக்கு இடையில் எப்படிக் காதலை மலரச் செய்தது என இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் எடுத்துரைக்கிறார்கள் . `நானும் ரெளடிதான்’ படத்தின் சர்ச்சையான அந்த மேக்கிங் காட்சிகளும் இந்த ஆவணப்படத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிப்பதாகச் செய்திகள் வெளியானதும் விக்னேஷ் சிவன் பற்றி வந்த மீம்களையெல்லாம் எப்படி விக்னேஷ் சிவன் நேர்மறையாக எதிர்கொண்டார் என்பதிலிருந்து தொடங்கி அவர் பற்றி அறியாத பல பக்கங்களை எடுத்துக் கூறி வேகத்தைக் கூட்டி ஆழ்ந்து கவனிக்க வைக்கிறார்கள்.

ஆனால் அதன் பிறகு ஒரே லாங் ஜம்ப் அடித்துத் திருமண வாழ்க்கைக்கு சென்றுவிடுவது கூடுதல் ஏமாற்றமே! அதை எடுத்துச் சொன்ன விதமும் சோர்வையே உண்டாக்குகிறது. நயன்தாராவின் சினிமா கரியரில் ஆகச்சிறந்த விஷயங்களில் மிக முக்கியமானது அவர் நடித்த அதிகப்படியான வுமன் சென்ட்ரிக் திரைப்படங்கள்தான். ஆனால், அது குறித்துப் பெரிதாகப் பேசாமல் `லேடி சூப்பர்ஸ்டார்’ கடந்து சென்ற விதமும் `டல்’ அடிக்க வைக்கிறது.

ஆவணப்படத்தின் நீளத்தில் கவனமாக இருந்த குழு அதன் தரத்திலும் கவனமாக இருந்திருக்கலாம். நயன்தாரா குறித்து ஏற்கெனவே தெரிந்த பல விஷயங்களே இதிலும் கொட்டிக் கிடக்கின்றன. அதிலும் சொல்லபட்ட பெரும்பான்மையான விஷயங்களை மேலோட்டமாகவே தொட்டுச் சென்றிருக்கிறார்கள். மென்மையாகத் தொடங்கிய இந்த ஆவணப்படம் நயன்தாரா பற்றித் தெரியாத பல முக்கியமான விஷயங்களைக் நமக்குக் கொடுப்பதில் தட்டுத் தடுமாறியிருக்கிறது.

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் பெருங்காதலை தனது வியூ ஃபைண்டர் மூலம் ரசித்து, உவமையாகப் படம்பிடித்து தனித்து நிற்கிறார் ஒளிப்பதிவாளர் சரண்யா சந்தர். ஆவணப்படங்களுக்கே உரித்தான ஃபார்முலாவில் கையாண்டு ஜொலிக்கும் படத்தொகுப்பாளர் மெதுவாக நகரும் கட்களைத் தூக்கி இன்னும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம். ஆங்காங்கே செயற்கைதனங்கள் எட்டிப் பார்க்கும் சினிமாட்டிக் விஷயங்களையும் ஸ்ட்ரிக்ட்டாக டீல் செய்திருக்கலாம். அதே சமயம், ஆங்காங்கே பயன்படுத்தப்பட்ட விக்னேஷ் சிவனின் பாடல் வரிகள் தாக்கத்தை ஏற்படுத்தும் கேமியோ செய்திருக்கிறது.

2 Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Comments are closed