Gas-Cylinders
Gas-Cylinders

சமையல் சிலிண்டரில் கேஸ் இருப்பை எப்படி தெரிந்து கொள்வது

5/5 - (5 votes)

எல்பிஜி சமையல் சிலிண்டர்களை கவனத்துடன் கையாள வேண்டியிருக்கிறது.. சிலிண்டரில் கேஸ் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்வது தெரியுமா?

எப்போதுமே, வீடுகளில் நாம் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டரை தரையோடு தரையாக ஒட்டி வைக்க கூடாது. தரை மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்கும்படியும் வைக்க வேண்டும். அதேபோல பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைத்து உபயோகிக்க வேண்டுமாம்.

ரப்பர் குழாய்கள்

கேஸ் சிலிண்டர்களில், ரப்பர் குழாயில் நிறைய கவனம் செலுத்த வேண்டும்.. ஐஎஸ்ஐ முத்திரை உள்ள அடுப்பு, ரெகுலேட்டர் மற்றும் ரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடுப்பை அணைக்கும்போது,. ரெகுலேட்டர் வால்வை மூடிவிட்டுதான், பிறகு வால்வை மூட வேண்டும். அதேபோல சிலிண்டர் மாற்றுவதானாலும், அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகே மாற்ற வேண்டும்.. ஏதாவது ரிப்பேர் ஆகிவிட்டாலும், நாமே அதை சரிசெய்ய முயலக்கூடாது. கேஸ் உபகரணங்களை ரிப்பேர் செய்வதாக இருந்தாலும், இந்த விபரீதத்திலும் நாம் இறங்க கூடாது.. வேறு யாரையும் அனுமதிக்கவும் கூடாது. விற்பனையாளர்களிடமே இந்த பொறுப்பை விட்டுவிடுவது பாதுகாப்பானது

மாற்று சிலிண்டர்

அதேபோல, மாற்று சிலிண்டர் இணைக்கும்போது பூஜை விளக்குகள், ஊதுவத்தி அனைத்தையும் அணைத்து விட வேண்டும்… கரண்ட் சம்பந்தமாக எதுவும் இயங்கக் கூடாது. கேஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதாக சந்தேகம் தோன்றினால் உடனடியாக கதவுகள், ஜன்னல்களை திறந்துவிட வேண்டும். சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேப்பு கேப்பினால் சிலிண்டர் வால்வை அழுத்தி மூடிவிட்டால், வால்விலிருந்து கேஸ் கசிவது தடுத்துவிடும். அதேபோல, சிலிண்டர் புதிதாக வாங்கும்பொழுது அதன் அளவு குறைவாக உள்ளதா? அல்லது நிறைந்திருக்கிறதா? என்பதை எப்படி அறிந்து கொள்வது தெரியுமா?

புதிய சிலிண்டர்

இதற்கு முதலில், ஈரத்துணி எடுத்து புதிய சிலிண்டரை நன்றாக துடைக்க வேண்டும்.. இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் இப்படியே துடைப்பதனால் ஈரமான இடங்கள் காய துவங்கிவிடும்.. எனினும், ஒரு சில இடத்தில் மட்டும் சிறிது நிமிடங்கள் எடுத்துக்கொண்டால் சிலிண்டர் அந்த அளவில்தான் இருக்கிறது என்று அர்த்தம். கேஸ் இருப்பை இன்னொரு வழியிலும் கண்டுபிடிக்கலாம்.. ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து கொண்டு, உங்களின் விரலை நனைத்து அந்த விரலால் சிலிண்டரின் மேல் கோடுபோட வேண்டும். நீளவாக்கில் சிலிண்டர் முழுமைக்கும் அந்த கோடு போட வேண்டும்… அப்படி கோடு போடும்போது காலியாக இருக்கும் சிலிண்டர் பகுதியில் அந்த ஈரக்கோடு விரைவில் காய்ந்து விடும். அதேநேரம் கேஸ் இருக்கும் பகுதியில் இந்த கோடு காய நீண்ட நேரம் ஆகும். இதை வைத்தே கேஸ் இருப்பை தெரிந்து கொள்ளலாம்.

கேஸ் காலி

சிலசமயம், நாம் எதிர்பார்க்காதபோது கேஸ் காலியாகிவிடும். அதனால் சிலிண்டரில் எவ்வளவு கேஸ் இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது தெரியுமா? சிலிண்டர் வாங்கும்போது A, B, C, D, என்று போட்டு எண் பதிவாகியிருக்கும். இந்த A என்பது ஜனவரி முதல் மார்ச் வரை என்பதைக் குறிக்கும். அதேபோல் B, C, D போன்றவை அடுத்தடுத்த 3 மாதங்களை குறிப்பதாகும்.

மாதம்-வருடம்

இந்த ஆங்கில எழுத்தின் கூடவே, பதிவாகியிருக்கும் நம்பர் வருடத்தை குறிப்பதாகும். எனவே, அதில் குறிப்பிடப்பட்டுள்ள வருட, மாதத்தோடு அந்த சிலிண்டரின் கால அளவு முடிகிறது என்பது பொருளாகும். இதற்கு மேல் அதை பயன்படுத்தினால் வெடிக்கும் அபாயமும் உண்டு. இதில் சந்தேகம் இருந்தால், சிலிண்டர் விநியோகிப்பவரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பர்னர்கள்

பொங்கி வழியும் பால் போன்ற பொருட்கள், அடுப்பை அணைத்து வெளிவரும் எரிவாயுவினால் வாயுக்கசிவு விபத்து நேரிடலாம். எனவே, கவனமுடன் கையாள வேண்டும். கேஸ் குழாயை குழந்தைகள் திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, ரப்பர் குழாயில் வெடிப்பு, துளை ஏதாவது இருக்கிறதா என்பதையும் அடிக்கடி பரிசோதித்து பார்க்க வேண்டும். கேஸ் அடுப்பின் பர்னரை அடிக்கடி கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரில், மண்ணெண்ணெய் அல்லது சலவை சோடா சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பிறகு பழைய டூத் பிரஷ் மூலம், பர்னரை சுத்தம் செய்து காயவைத்து, அதன்பிறகே பொருத்த வேண்டும்.