27 நட்சத்திரக்காரர்களும் சென்று வழிபட வேண்டிய ஆலயங்கள்

5/5 - (7 votes)

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு கோயில் உள்ளது. நமக்கு நவ கிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகளையும் துன்பங்களையும் தீர்க்க நம்முடைய நட்சத்திர ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் பாதிப்புகளை குறைக்கலாம். 27 நட்சத்திரக்காரர்கள் எந்த ஆலயத்திற்கு சென்று வழிபடலாம் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க

27 நட்சத்திரங்களும் அதற்கு உண்டான கோயில்களும்

நக்ஷத்திரம்ஆலயம்மாவட்டம்
அஷ்வினிஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம்திருவாரூர் மாவட்டம்
பரணிஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம்நாகபட்டினம் மாவட்டம்
கார்த்திகைஸ்ரீ காத்ரசுந்தறேஸ்வரர் ஆலயம்நாகபட்டினம் மாவட்டம்
ரோஹிணிஸ்ரீ பாண்டவதூதர் ஆலயம்காஞ்சிபுரம்
மிருகசீரிடம்ஸ்ரீ ஆதிநாரயனபெருமாள் ஆலயம்திருவாரூர் மாவட்டம்
திருவாதிரைஸ்ரீ அபயவரதீஸ்வரர் ஆலயம்தஞ்சாவூர் மாவட்டம்
புனர்பூசம்ஸ்ரீ அதீதீஸ்வரர் ஆலயம்வேலூர் மாவட்டம்
பூசம்ஸ்ரீ அட்சயபுரீஸ்வரர் ஆலயம்தஞ்சாவூர் மாவட்டம்
ஆயில்யம்ஸ்ரீ கர்கடேஸ்வரர் ஆலயம்தஞ்சாவூர் மாவட்டம்
மகம்ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயம்திண்டுக்கல் மாவட்டம்
பூரம்ஸ்ரீ ஹரிதீர்தேஸ்வரர் ஆலயம்புதுக்கோட்டை மாவட்டம்
உத்திரம்ஸ்ரீ மாங்கல்யீஸ்வரர் ஆலயம்திருச்சி மாவட்டம்
ஹஸ்தம்ஸ்ரீ கிருபாகூபறேஸ்வரர் ஆலயம்நாகை மாவட்டம்
சித்திரைஸ்ரீ சித்திரை ரத வல்லப பெருமாள் ஆலயம்மதுரை மாவட்டம்
சுவாதிஸ்ரீ தாத்திரீஸ்வரர் ஆலயம்சென்னை
விசாகம்ஸ்ரீ திருமலை முத்துகுமாரசுவாமி ஆலயம்திருநெல்வேலி மாவட்டம்
அனுஷம்ஸ்ரீ மகாலக்ஷ்மீஸ்வரர் ஆலயம்நாகை மாவட்டம்
கேட்டைஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயம்தஞ்சை மாவட்டம்
மூலம்ஸ்ரீ சிங்கீஷ்வரர் ஆலயம்திருவள்ளூர் மாவட்டம்
பூராடம்ஸ்ரீ ஆகாஷபுரீஸ்வரர் ஆலயம்தஞ்சாவூர் மாவட்டம்
உத்திராடம்ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்சிவகங்கை மாவட்டம்
திருவோணம்ஸ்ரீ பிரசன்னவேங்கடேஷபெருமாள் ஆலயம்வாலாஜாபாத்
அவிட்டம்ஸ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம்தஞ்சை மாவட்டம்
சதயம்ஸ்ரீ அக்னிபுரீஷ்வரர் ஆலயம்திருவாரூர் மாவட்டம்
பூரட்டாதிஸ்ரீ திருவனேஸ்வரர் ஆலயம்தஞ்சாவூர் மாவட்டம்
உத்திரட்டாதிஸ்ரீ சஹஸ்ரலட்ச்மீஸ்வரர் ஆலயம்புதுக்கோட்டை மாவட்டம்
ரேவதிஸ்ரீ கைலாசநாதர் ஆலயம்திருச்சி மாவட்டம்

உங்களின் நட்சத்திர ஆலயங்களுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது என ஒன்பது கிரகங்களும் மூன்று நட்சத்திரங்கள் வீதம் 27 நட்சத்திரங்களை ஆட்சி செய்கின்றன.

தசாபுத்தி சரியில்லாமல் இருக்கும் போது ஏற்பாடும் பாதிப்புகளைப் போக்க நம்முடைய நட்சத்திர கோவிலுக்கு சென்று வணங்கலாம். திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்களில் 27 நட்சத்திரங்களுக்கு தனித் தனி லிங்கங்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சென்று நம்முடைய பிறந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வணங்கலாம்.

I am Vimal - Versatile blog writer with a flair for transforming ideas into engaging narratives. Crafting content that informs, inspires, and captivates readers on a diverse range of topics.

You may also like...