ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

5/5 - (1 vote)

ஆதார் அட்டை என்பது மிக முக்கிய அடையாளச் சான்றாகும். ஆதார் அட்டை இல்லாமல் வங்கி கணக்கு திறப்பது முதல், சிம் கார்டு பெறுவது, பள்ளியில் கல்லூரியில் சேர்வது என அனைத்தும் சிக்கலாகும். ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் சரியானதாகவும் இருக்க வேண்டும். இதை உறுதிபடுத்த, ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை புதுப்பிப்பது (Aadhaar Card Update) அவசியம்.

இந்நிலையில், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது. முன்னதாக, மார்ச் 14ம் தேதி என இருந்த காலக்கெடு, தற்போது ஜூன் 14ம் தேதி வரை நீட்டிப்பட்டுள்ளது. இனி, ஆதார் அட்டை ஆவணங்களை 2024 ஜூன் 14ம் தேதி வரை, mAadhaar போர்ட்டலில் இலவசமாகப் புதுப்பிக்கலாம்.

ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது.

UIDAI எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “UIDAI இலவச ஆன்லைன் ஆவணப் பதிவேற்ற வசதியை ஜூன் 14, 2024 வரை நீட்டிக்கபட்டுள்ளது; ஆதார் வைத்திருக்கும் கோடிக்கணகானோர், இதனால் பயனடைவார்கள். இந்த இலவசச் சேவை myAadhaar போர்ட்டலில் மட்டுமே கிடைக்கும். UIDAI,தங்கள் ஆதாரில் புதுப்பித்துக்கொள்ள மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது” என்று பதிவிட்டுள்ளது.

எனினும், இலவச சேவை myAadhaar போர்ட்டலில் மட்டுமே கிடைக்கும். ஆஃப்லைன் முறையில், ஆதார் மையங்களுக்கு சென்று இந்த சேவையை பெற கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாமல் இருந்தால், அவை உடனே புதுப்பிக்கப்பட வேண்டும். இதற்காக அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று (PoI/PoA) ஆவணங்களைப் பதிவேற்றும்படி UIDAI தொடர்ந்து மக்களை கேட்டுக் கொண்டு வருகிறது. பல விதமான மோசடிகளை தடுக்கவும், நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது அவசியமானதாகும்.

ஆதார் அட்டையில் உள்ள பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட தகவல்களை புதுப்பிக்க ஆன்லைன் சேவையை பயன்படுத்தலாம் இது இலவசமாக கிடைக்கும் சேவை. அல்லது உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள உள்ளூர் ஆதார் மையத்திற்குச் செல்லலாம். இதற்கு ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன் சேவை மட்டுமே இலவசமாக கிடைக்கும்.

உங்கள் ஆதார் அட்டையின் பெயர், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றை இலவசமாக மாற்றுவதற்கான வழிமுறை

  1. UIDAI-ன் https://myaadhaar.uidai.gov.in/ என்னும் அதிகாரபூர்வ இணையதளத்தில் லாக் இன் செய்ய வேண்டும்
  2. ‘Document Update’ என்பதைத் தேர்ந்தெடுத்து தகவலை புதுப்பிக்க தேவையான ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்களின் தற்போதைய விவரங்கள் திரையில் தோன்றும்.
  3. ஆதார் அட்டை விவரங்களைச் சரிபார்த்து, அடுத்த ஹைப்பர்-லிங்கில் கிளிக் செய்யவும்.
  4. கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணத்தைத் தேர்வு செய்யவும்
  5. ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும்.

இந்திய குடிமக்களுக்கு ஆதார் எண் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட அடையாள வடிவமாக மாறியுள்ளது. ஆதார் எண் வைத்திருப்பவர்கள், 2016ம் ஆண்டின் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிகளின் கீழ், ஆதார் அட்டையில் உள்ள தரவுகள் சரியாக இருப்பதை உறுதி செய்வதற்காக, ஆதார் அட்டை பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது, ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை புதுப்பிக்க வேண்டும். அதற்கு தேவையான ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும்.

I am Vimal - Versatile blog writer with a flair for transforming ideas into engaging narratives. Crafting content that informs, inspires, and captivates readers on a diverse range of topics.

You may also like...