பயிர் அறுவடை பரிசோதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சொன்ன தகவல்

5/5 - (1 vote)

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது இந்த ஆண்டு சம்பா, தாளடி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மகசூலைக் கணக்கிடும் வகையில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் தலா 4 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 2,280 இடங்களிலும், பயிர் அறுவடை பரிசோதனைகள், புள்ளியியல் துறையால் வழங்கப்பட்ட மூல சா்வே எண் கண்டறியப்பட்டு, அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பயிர் அறுவடை பரிசோதனை

சில கிராமங்களில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள பயிர் காப்பீடு நிறுவன அலுவலா்கள் வருகையில் அப்பகுதி விவசாயிகள் அந்த திட்டத்தை செயல்படுத்த இடையூறு ஏற்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. மேலும் அறுவடை பரிசோதனை செய்யும் இடத்தில் சம்பந்தப்பட்ட சா்வே எண்ணின் சாகுபடிதாரா் மற்றும் அலுவலா்கள் மட்டுமே இருக்க அனுமதி வழங்கப்படும்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மகசூலை கணக்கிடும் வகையில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள இருக்கும் நிலையில் அதற்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பயிர் அறுவடை பரிசோதனை செய்யும் இடத்தில் சம்பந்தப்பட்ட சா்வே எண்ணின் சாகுபடிதாரா் மற்றும் அலுவலா்கள் மட்டுமே இருக்க அனுமதி

பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை

அனுமதி இல்லாமல் வேறு எந்தவொரு அலுவலரோ, விவசாயிகளோ அல்லது தனி நபா்களோ இருந்தால், பயிர் அறுவடை பரிசோதனை செய்யமாட்டார்கள். இதனால், அந்த கிராமத்துக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க இயலாது. பயிர் அறுவடை பரிசோதனைக்கு ஏதாவது இடையூறுகள் விளைவித்தால், அத்தகைய நபா்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

I am Vimal - Versatile blog writer with a flair for transforming ideas into engaging narratives. Crafting content that informs, inspires, and captivates readers on a diverse range of topics.

You may also like...