T20 Virat-Kohli
T20 Virat-Kohli

டி20 உலக கோப்பை: டி20 உலக கோப்பையில் விராட் கோலிக்கு புதிய பொறுப்பு

5/5 - (5 votes)

2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வரும் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கியுள்ள இந்த அணியில் விராட் கோலிக்கு இடம் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் இந்த அணியில் பல வீரர்கள் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து பல விமர்சனங்கள் இருந்துள்ள நிலையில் முன்னால் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா விராட் கோலிக்கு புதிய பொறுப்பு கொடுத்தால் இந்த அணி சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் என்னை பொறுத்தவரை விராட் கோலி தான் இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக இருக்க வேண்டும். விராட் கோலிக்கு பதில் ரோகித் சர்மா நம்பர் மூன்றாவது இடத்தில் களமிறங்க வேண்டும். ஏனென்றால் ஒரு கேப்டனாக டி20 கிரிக்கெட் போட்டியில் பல்வேறு விஷயங்கள் அவருடைய மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

இதனால் போட்டியின் போக்கை குறித்து தெரிந்து கொள்ள அவர் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும். விராட் கோலி போன்ற ஒரு வீரர் உங்கள் அணியில் இருந்தால் நிச்சயமாக ரன்கள் உங்களுக்கு கிடைக்கும் என்பது நீங்கள் அறிவீர்கள். இதனால் விராட் கோலியை டாப் வரிசையில் பயன்படுத்துங்கள். பவர் பிளே முழுவதும் அவர் விளையாட வையுங்கள். இதனை பயன்படுத்திக்கொண்டு நிச்சயம் அவர் போட்டியில் முழுவதும் விளையாடுவார்.

20, 30 ரன்கள் அவர் எடுத்திருந்தபோது சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் நிலைமை வந்தால் அவர் நீண்ட நேரம் விளையாடி ரன்களை சேர்ப்பார். விராட் கோலி அணியில் இருக்கிறார் என்றால் அவருக்கு தொடக்க வீரர் தான் சரியான இடம். இதேபோன்று ஹர்திக் பாண்டியா மீது பல கேள்விக்குறிகள் திரும்பி இருக்கிறது.

எனினும் என்னை பொறுத்தவரை அவர் ஒரு ஸ்பெஷல் வீரர் இந்த நாட்டில் கிடைத்திருக்கக்கூடிய அரிய ஒரு வீரர் என்றால் அது ஹர்திக் பாண்டியா தான்.ஏனென்றால் வேகப் பந்து வீசவும் தெரியும். அவருக்கு பேட்டிங்கும் நன்றாக வரும். பார்மை வைத்து அணியை தேர்வு செய்திருக்க மாட்டார்கள். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்த அணியில் பல திறமைகளை நிரூபித்திருக்கக்கூடிய வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள்.

தற்போது அனைத்தும் ரோகித் கையில் இருக்கிறது. ரோகித் என்ன நினைக்கிறாரோ அதே போல் தான் அணியில் மாற்றம் நிகழும் என்று அஜய் ஜடேஜா கூறியுள்ளார். அஜய் ஜடேஜா கூறியவாறு விராட் கோலி நம்பர் ஒன் வீரராக இருக்க வேண்டும். ஆனால் ரோகித் சர்மா மூன்றாவது இடத்திற்கு போகாமல் கோலிக்கு ஜோடியாக அவர் களமிறங்கினால் பிளேயிங் லெவனில் சிவம் துபே, ஹர்திக் பாண்டியா என இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த முடியும். இல்லையெனில் அக்சர் பட்டேல், ஜடேஜா என இரண்டு ஆல்ரவுண்டர் சுழற் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்த முடியும்.