Ooty Weather Change
Ooty Weather Change

ஊட்டியெல்லாம் குளிருது ஜில் காற்று மழையால் குஷியான மக்கள்

5/5 - (4 votes)

கடும் வெப்பத்துக்கு நடுவில், ஊட்டியில் இன்று சில்லென்று கோடை மழை பெய்துள்ளது. இதனால், ஊட்டியே ஜில்லென்று காணப்படுகிறது.

கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் மண்டையை பிளந்து வருவதால், தமிழக மக்கள் விழிபிதுங்கியிருக்கிறார்கள்.. தமிழ்நாடு முழுவதும் வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது.. அளவுக்கு அதிகமான வெப்பம் நிலவும் என்று வானிலை மையம் எச்சரித்து வந்தபோதிலும்கூட, சமாளிக்க முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.

வேலூர்

குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் மாமாவட்டங்களில் 105, 106 டிகிரி என தொடர்ந்து பதிவாகி கொண்டிருக்கிறது.. இதில் பெரிதும் அதிர்ச்சியை தந்தது நீலகிரி மாவட்டம்தான்.. பல்வேறு மாநிலங்களில் வெயில் தாங்காமல் ஊட்டிக்கு படையெடுத்து வருகிறார்கள் சுற்றுலா பயணிகள்.. ஆனால், ஊட்டியிலேயே வெயில் கொளுத்துவது அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தந்து கொண்டிருக்கிறது..

ஊட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகி உள்ளது. ஊட்டி “ரிக்கார்டு பிரேக்” செய்துள்ளது.. கடந்த ஏப்ரல் 28ம் தேதி, உதகையில் வெப்பம் 29 செல்ஷியஸ் ஆக பதிவாகியிருக்கிறது.. இது வழக்கத்தை விட 5.4 டிகிரி செல்ஷியஸ் அதிகம் ஆகும். 73 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் வெயில் அதிகமாம்.. அதேபோல, ஏப்ரல் மாதங்களிலே அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்திருந்தது ஊட்டி.. இதனால் ஊட்டி மக்கள் விழிபிதுங்கி கொண்டிருக்கிறார்கள்.

சாத்தியக்கூறுகள்

இப்படிப்பட்ட சூழலில்தான், இன்று முதல் 6ம் தேதி வரை மழை வருவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பானது, தமிழக மக்களுக்கு மிகுந்த ஆறுதலை தந்து வருகிறது.. இந்நிலையில், இன்று ஊட்டியில் திடீர் மழை பெய்தது.. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், இது ஒரு குளிர்பிரதேசம் என்பதே கேள்விக்குறியாக இருந்து வந்தது. அதிலும் காலை முதல் மாலை வரை அனல் வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்ததால், குடிநீர் தட்டுப்பாடும் ஊட்டியில் ஏற்பட்டுள்ளது. எப்போதுமே கோடைக்காலம் தொடங்கும்போது அனல் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது கோடை மழை பெய்வது வழக்கம். ஆனால் கோடைமழை உடனடியாக தொடங்காததால் மலைமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வந்தது.

காலநிலை மாற்றம்

இன்று மதியம், திடீரென காலநிலை மாற்றம் ஏற்பட்டு, வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து, மழை, சடசடவென கொட்டத் தொடங்கியது. சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக இந்த மழைப்பொழிவு நீடித்தது. குளிர்ந்த காற்று வீசுவதாலும், சாரல் மழை பெய்து வருவதாலும் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.

குளிர்ந்த காற்று வீசுவதாலும், சாரல் மழை பெய்து வருவதாலும் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர். ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.. பிங்கர் போஸ்ட், ஹெல்கில், மஞ்சன கொரை, முத்தொரை பாலாடா, மேல்கவ்வட்டி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

குளிர்ச்சி

இதனால் ஊட்டியில் கடும் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான காலநிலை தற்போது நிலவுகிறது.. இது உள்ளூர் மக்களை மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளையும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்போதுள்ளதை போலவே, தொடர்ந்து கோடைமழை பெய்து வந்தால், ஊட்டியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறைவதுடன், வனப்பகுதிகளிள்ள விலங்குகளின் நீர் பற்றாக்குறையும் தணியும் என்று நம்பப்படுகிறது.