Screen Celebrities Voted in Chennai
Screen Celebrities Voted in Chennai

லோக்சபா தேர்தல் 2024: சென்னையில்வாக்களித்த திரை பிரபலங்கள்

5/5 - (6 votes)

நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ,சினிமா துறையை சேர்ந்த திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து, பிரபலங்கள் எல்லாம் வாக்கு செலுத்தி இருக்கிறார்கள்.

அஜித்குமார்

திருவான்மியூர் வாக்குச்சாவடியில் 20 நிமிடம் முன்னதாகவே வந்து காத்திருந்து முதல் நபராக நடிகர் அஜித்குமார் வாக்களித்து சென்றார்.

தனுஷ்

சென்னை தியாகராயநகர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து நடிகர் தனுஷ் தனது வாக்கை பதிவு செய்தார்.

ரஜினிகாந்த்

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு வருகை தந்து நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்து சென்றார்.

விஜய்

ரஷ்யாவில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிய விஜய், நீலாங்கரையில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட்டார்.

விஜய்சேதுபதி

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்து நடிகர் விஜய் சேதுபதி வாக்களித்தார்.

கமல்ஹாசன்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வாக்கு செலுத்தினார்.

சிவகார்த்திகேயன்

சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு செலுத்தினார்.

பாரதி ராஜா

சென்னை, தி.நகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது மகன் மனோஜ் உடன் சென்று இயக்குனர் பாரதி ராஜா வாக்கு செலுத்தினார்.

சசிகுமார்

மதுரை தாமரைப்பட்டி வாக்குச்சாவடியில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் வாக்கு செலுத்தினார்.

வெற்றிமாறன்

சென்னை விருகம்பாக்கம் சின்மயா பள்ளிக்கு சென்று இயக்குனர் வெற்றிமாறன் தனது வாக்கை செலுத்தினார்.

இளையராஜா

சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று இசையமைப்பாளர் இளையராஜா வாக்கு செலுத்தினார்.

கார்த்திக்

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு நடிகர் கார்த்திக் அவருடைய மகன் கெளதம் கார்த்திக் உடன் வந்து வாக்கு செலுத்தினார்.

பிரபு

சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்,” என்றார்.