குளிர்காலம் வந்துவிட்டாலே டீ, காபி குடிக்க மவுசு அதிகமாகிவிடும். பெரும்பாலானோர் டீ காபி குடிக்காமல் காலைப் பொழுதை தொடங்குவது இல்லை. சிலர் பால் காபி குடிப்பதையும், சிலர் வெறும் பிளாக் காபி குடிப்பதையும் விரும்புகின்றனர். இரண்டும் சில நன்மைகளைக் கொண்டிருந்தாலும், இரண்டில் எது பெஸ்ட்? என்ற கேள்வி சிலருக்கு இருக்கிறது.
பொதுவாகவே காபி வெப்பமடையும் தன்மை கொண்டது. சளி, கண்புரை, இருமல் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குளிர்காலத்தில் காபி குடித்தால் அதிக நன்மைகள் கிடைக்கும். உடம்பு முழுவதும் மிகவும் குளிர்ச்சியாக இருப்பவர்கள் பிளாக் காபி அல்லது காபி குடிப்பதை பிரதானமாக தேர்ந்தெடுக்கலாம். ஆனால், கல்லீரல் மற்றும் சூடு பிரச்சனை இருப்பவர்கள் காபி அல்லது பிளாக் காபி குடிப்பது நல்லதல்ல.
காபி, பிளாக் காபி இரண்டிலும் சர்க்கரை மற்றும் பால் சேர்த்தாமல் குடிக்கலாம். ஏனென்றால் கலோரிகளை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல யுக்தி. எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் பிளாக் காபி மற்றும் டீ குடிக்கலாம். ஆனால் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் சர்க்கரை, பால் சேர்த்தக்கூடாது. இவையிரண்டும் கூடுதல் கலோரிகளை சேர்க்கும். அதனால், பிளாக் காபி அல்லது டீ குடிப்பதால் ஆரோக்கியத்துக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
காபியில் காஃபின் உள்ளது, இது ஆற்றலை அதிகரிக்கிறது. இந்த காபியை உட்கொள்வதால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும். ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த கருப்பு காபி, செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. சர்க்கரை நோயாளிகள் இதனை உட்கொண்டால் பலன் கிடைக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காபியை தினமும் குடிப்பதால் சர்க்கரை நோய் கட்டுப்பட்டு இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பிளாக் டீ என்றால் பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றுடன் சேர்த்து குறைந்த அளவு காஃபின் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நன்மையானதுதான். இதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். எடை கட்டுக்குள் இருக்கும். ஃபிரான்டியர்ஸ் இன் ஜெனெடிக்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, வழக்கமான பிளாக் டீயை உட்கொள்பவர்கள் தங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருந்தனர் என கூறியுள்ளது. பிளாக் டீ குடிப்பதால் குடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த டீ கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனை உட்கொள்வதால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த தேநீர் கல்லீரலை சீர்படுத்தி மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பிளாக் டீயில் பாலிஃபீனால்கள் உள்ளன, இது உடலை நச்சுத்தன்மையில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. பிளாக் டீ எலும்புகளை பலப்படுத்துகிறது. இதனை உட்கொள்வதால் செரிமானம் மேம்படும் மற்றும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.
கருப்பு தேநீர் மற்றும் கருப்பு காபி இரண்டும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குளிர்காலத்தில் கருப்பு காபி சாப்பிடுவது நல்லது, அது உடலை சூடாக வைத்திருக்கும். நீங்கள் காஃபின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த விரும்பினால், நீங்கள் பிளாக் டீ உட்கொள்ளலாம். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பிளாக் காபிக்கு பதிலாக பிளாக் டீ சாப்பிட வேண்டும். இரவில் கருப்பு டீ மற்றும் கருப்பு காபி இரண்டையும் தவிர்க்கவும். ஏனென்றால் இதை குடித்தால் இரவில் தூக்கத்தை இழக்க நேரிடும்.
Pingback: கொலஸ்ட்ரால் வராமல் தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் | ஆரோக்கியம்