Jana Gana Mana National Anthem ஜன கண மன

ஜன கண மன தேசிய கீதம் பாடல் வரிகள், ஆங்கிலத்தில் பாடல் வரிகள், Audio, Video, MP3 Download, Lyrics

5/5 - (1 vote)

ஜன கண மன / சன கண மன… (Jana Gana Mana; வங்காள மொழி: জন গণ মন) இந்திய நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் வங்காள மொழியில், இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் ஆகும்.

ரவீந்திரநாத் தாகூரின் பாடல், ஜன-கன-மன, 24 ஜனவரி 1950 அன்று இந்திய அரசியலமைப்புச் சபையால் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் சரணம் தேசிய கீதத்தின் முழுப் பதிப்பைக் கொண்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜன கண மன

சன கண மன அதிநாயக செய கே
பாரத பாக்கிய விதாதா.
பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல சலதி தரங்கா.
தவ சுப நாமே சாகே,
தவ சுப ஆசிச மாகே,
காகே தவ செய காதா.
சன கண மங்கள தாயக செயகே
பாரத பாக்கிய விதாதா.
செய கே, செய கே, செய கே,
செய செய செய, செய கே.

தமிழாக்கம் ஜன கண மன

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பான இது அரசு பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றது:

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்றநீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்குவெற்றி! வெற்றி! வெற்றி!

பாடும் முறை

தேசிய கீதம் 52 வினாடிகளில் பாடப்பட வேண்டும்.
தேசிய கீதம் பாடப்படும்போது அசையாமல் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

தேசிய கீதம் பாடல் MP3 Download

தேசிய கீதம் பாடல்

ஜன கண மன English-ஹிந்தி

Jana-gana-mana-adhinayaka Jaya he
Bharat-bhagya-vidhata
Punjaba-Sindhu-Gujarata-Maratha
Dravida-Utkala-Banga
Vindhya-Himachala-Yamuna-Ganga
Uchhala-jaladhi-taranga
Tava subha name jage,
Tava subha asisa mange,
Gahe tava jaya-gatha.
Jana-Gana-Mangala-dayaka jaya he
Bharata-bhagya-vidhata
Jaya he Jaya he Jaya he
Jaya Jaya Jaya, Jaya he

Tagore’s English Translation of Jana-Gana-Mana

Thou art the ruler of the minds of all people
Dispenser of India’s destiny.
The name rouses the hearts of Punjab, Sind, Gujarat and Maratha,
Of Dravida and Orissa and Bengal.
It echoes in the hills of Vindhyas and Himalayas,
Mingles in the music of Jamuna and Ganga and is
chanted by the waves of the Indian sea.
They pray for thy blessings and sing thy praise
The saving of all people waits in thy hand,
Thou dispenser of India’s destiny.
Victory, victory, victory to thee.

Related Post