லோக்சபா தேர்தல்-2024-க்கு முன்னதாக சென்னை கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

5/5 - (3 votes)

லோக்சபா தேர்தலை முன்னிட்டு சென்னை கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமை புறப்படுகிறது. மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வரும் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் புறப்படுகிறது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.. இந்த தேர்தல் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பலரும் நாளை முதல் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.. நாளையும் நாளை மறுநாளும் பொதுமக்கள் சொந்த ஊர் சென்று வாக்களிக்க சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 20 92 பேருந்துகளுடன் , 2 970 சிறப்பு பஸ்கள் என 2 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7154 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 2 நாட்களுக்கு 3060 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 10 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேற்படி சிறப்பு இயக்க தினங்களில் வருகிற 18-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு பெரும்பான்மையான தடங்களில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. தற்போதைய (நேற்றைய) நிலவரப்படி 16-ந் தேதிக்கான (இன்று) 30 ஆயிரத்து 630 முன்பதிவு இருக்கைகளில், ஆயிரத்து 22 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, 29 ஆயிரத்து 608 இருக்கைகள் காலியாக உள்ளன. இதே போன்று, 17-ந் தேதிக்கான 31 ஆயிரத்து 308 முன்பதிவு இருக்கைகளில் 6 ஆயிரத்து 475 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 ஆயிரத்து 833 இருக்கைகள் காலியாக உள்ளன. எனவே, 18-ந் தேதி கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து 16, 17-ந் தேதிகளில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அரசு கூறியுள்ளது.

Train No. 06001Tambaram – Kanniyakumari Superfast SpecialStationTrain No. 06002 Kanniyakumari -Tambaram Superfast Special
16.45 (Thursday & Saturday)(d)Tambaram(a)09.20 (Saturday & Monday)
17.18/17.20(a/d)Chengalpattu(a/d)08.33/08.35
18.50/18.55(a/d)Villupuram(a/d)06.35/06.40
19.35/19.37(a/d)Vriddhachalam(a/d)05.10/05.12
21.20/21.30(a/d)Tiruchchirappalli(a/d)03.20/03.30
22.30/22.35(a/d)Dindigul(a/d)02.02/02.05
23.45/23.50(a/d)Madurai(a/d)01.05/01.10
00.23/00.25(a/d)Virudunagar(a/d)00.03/00.05
00.46/00.48(a/d)Sattur(a/d)23.40/23.41
01.11/01.12(a/d)Kovilpatti(a/d)23.21/23.22
02.20/02.25(a/d)Tirunelveli(a/d)22.20/22.25
03.02/03.03(a/d)Vallyur(a/d)21.31/21.32
03.30/03.35(a/d)Nagercoil(a/d)20.50/20.55
04.40 (Friday & Sunday)(a)Kanniyakumari(d)20.30 (Friday & Sunday)

பேருந்துகள் மட்டுமின்றி, சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து நாளை மாலை 4.45 மணிக்க புறப்பட்டு, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல் , மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு அதிகாலை 4.40க்கு ரயில் சென்றடையும். இந்த ரயில் ஏப்ரல் 18, 20 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் (ஏப்ரல் 19, 21 தேதி) தேர்தல் சிறப்பு ரயில் இரவு 8.30க்கு புறப்பட்டு, நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு காலை 9.20க்கு வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

I am Vimal - Versatile blog writer with a flair for transforming ideas into engaging narratives. Crafting content that informs, inspires, and captivates readers on a diverse range of topics.

You may also like...