tamil-nadu-theater-owners-association
tamil-nadu-theater-owners-association

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு

5/5 (14votes)

வாக்குப்பதிவு தினத்தன்று தமிழகத்திலுள்ள தியேட்டர் ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்க உரிமையாளர் சங்கமும் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜுன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வருகிற 19-ம் தேதி, ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க போகிறது..

பிரச்சாரங்கள்

இதையடுத்து, தேர்தல் பிரச்சாரங்கள் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது… எனவே, இன்று மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது. இன்று மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பணியாற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு திரைப்படக் கண்காட்சியாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரவு

“எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறும் இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் அன்று 19.04.2024 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. அதன்படி, ஏப்ரல் 19ம் தேதி பகல் நேர காட்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 1168 திரையரங்குகளில் முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஏப்ரல் 19ம் தேதி மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் வழக்கம்போல திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையா

தேர்தல் ஆணையம்

வாக்குப்பதிவு நாளில் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும், பொது விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டது.. மேலும் விடுமுறையை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

அதன்படியே, 19-ந்தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்த நிலையில், 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடப்படுகிறது. அத்துடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

கோயம்பேடு

அதுபோலவே, கோயம்பேடு மார்க்கெட்டும், வாக்குப்பதிவு தினத்தன்று மூடப்படும் என்று அறிவித்துள்ளது.. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் 10000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களும் வாக்களிக்க ஏதுவாக, வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம்தேதி கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை விடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் அதுமட்டுமில்லாமல் கோயம்புத்தூர் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளும் தனியார் நிறுவனங்களும் மூடப்பட இருக்கின்றன.