special darshan ticket tirupati
special darshan ticket tirupati

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வரும் 24-ல் வெளியீடு

5/5 - (4 votes)

திருப்பதி ஏழுமலையானை வரும் ஜூலை மாதம் குறிப்பிட்ட சில ஆர்ஜித சேவைகள் மூலம் தரிசிக்க குலுக்கல் முறையிலும் பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்காக நாளை முதல் 20-ம் தேதி வரை பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள ஆர்ஜித சேவைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைஉள்ளிட்டவற்றுக்கான டிக்கெட்களை 22-ம் தேதியும் அங்கப்பிரதட்சனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்களை 23-ம் தேதியும் பெற்றுக் கொள்ளலாம்.

மூத்த குடிமகன்கள், மாற்று திறனாளி பக்தர்கள் 23-ம் தேதி மதியம் 3 மணிக்கு அதற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஏப்ரல் மாதம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.