ஹர்திக் பாண்டியா இடத்தை பிடிக்கும் ஷிவம் துபே டி20 உலகக் கோப்பையில் யாருக்கு வாய்ப்பு

5/5 - (3 votes)

ஹர்திக் பாண்டியா பந்து வீசுவதில் சிக்கல் ஏற்பட்டால் அவருக்கு டி20 உலகக் கோப்பையில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஏனென்றால், அவருக்கான போட்டியில் ஷிவம் துபேயும் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் அதிரடி மன்னனாக இருக்கிறார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணியில் இன்னும் 15 நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இந்த ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா அமைந்துள்ளது.

இதற்கான ரேஸில் ஏற்கனவே லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மாயங்க் யாதவ் பெயர் அடிபட்டுள்ளது. தனது சிறப்பான பந்து வீச்சால் மாயங்க் யாதவ் 3 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 156.7 கீமீ வேகத்தில் பந்து வீசி அதிவேகமக பந்து வீசியவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். இதன் காரணமாக டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் காயம் அடைந்து வெளியேறிய நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் டி20 கிரிக்கெட்டிற்கு திரும்ப வந்துள்ளார்.

ஆனால், இந்த சீசன் ஆரம்பத்தில் 3 தோல்விகளை கொடுத்தாலும் அதன் பிறகு 2 வெற்றிகளை பெற்றார். இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் களமிறங்குகிறது. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா முழு நேரமாக பந்து வீசாமல் ஓரிரு ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா 8 ஓவர்கள் வீசி 89 ரன்கள் குவித்தார். 2 போட்டிகளில் ஓவர்கள் வீசவில்லை. உண்மையில், அடுத்து டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அவர் கடுமையான காயம் ஏற்படாமல் தடுப்பதற்கு பந்து வீசுவதை குறைக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அவர் பந்து வீசவில்லை என்றால் அணியில் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்படும். முகமது ஷமியும் இல்லை. ரவீந்திர ஜடேஜாவிற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியா 2 வேகப்பந்து வீச்சாளர்கள் போதும் என்று நினைத்தால் பும்ரா மற்றும் சிராஜ் இருக்கின்றனர். ஒருவேளை ஹர்திக் பாண்டியா காயம் ஏற்பட்டால் இந்தியா மற்றொரு சிறந்த ஆல்ரவுண்டரை கொண்டுள்ளது.

அவர் தான் ஷிவம் துபே. ஆறுச்சாமி என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஐபிஎல் சீசனில் அதிரடியாக சிக்ஸர் விளாசி வரும் நிலையில் சிஎஸ்கேயின் எக்ஸ் பக்கத்தில் ஆறுச்சாமி என்று குறிப்பிடப்பட்டு வருகிறார்.

பாண்டியா பவுலிங் செய்யவில்லை என்றாலும், இந்திய அணி அடுத்த வேகப்பந்து வீச்சாளர் தேவையில்லை என்று நினைத்தால் ரிங்கு சிங் அதற்கா பட்டியலில் இருக்கிறார். எது எப்படியோ, இந்திய அணியில் ஆல்ரவுண்டருக்கான பட்டியலில் ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் ஆகியோர் இருக்கின்றனர். யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

I am Vimal - Versatile blog writer with a flair for transforming ideas into engaging narratives. Crafting content that informs, inspires, and captivates readers on a diverse range of topics.

You may also like...