Child Memory
Child Memory

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை கொடுங்கள்

5/5 - (1 vote)

பொதுவாக பெரியவர்களுக்கு தான் ஞாபக மறதி ஏற்படும். ஆனால் இப்போது குழந்தைகளுக்கும் ஞாபக மறதி ஏற்படுகிறது. இதனால் படிப்பில் அதிக ஆர்வம் செலுத்தாமல் போய்விடுகிறது மற்றும் படிப்பது ஞாபகத்தில் இருக்காமல் மறந்து விடுகிறார்கள். காரணம் என்னவென்றால் சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் இருப்பதே ஆகும். எனவே இதனை சரி செய்து நினைவுத்திறனை அதிகரிக்கும் உணவு ஒன்றினை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்

தேவையான பொருட்கள்:

பொருட்கள்அளவு
பூசணி விதை1 கப்
பாதாம் பருப்பு1/4 கப்
வால்நட்1 கப்
எள்ளு1/4 கப்
பிரேசில் நட்ஸ்1/4 கப்
வெல்லம்1 கப்
ஏலக்காய் தூள்1 டீஸ்பூன்
நெய்1 ஸ்பூன்

ஸ்டேப் -1: முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பூசணி விதைகளை சேர்த்து கொள்ளுங்கள். பூசணி விதை பொரிந்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2: பிறகு, அதே கடாயில் வால்நட் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். இதேபோல், பாதாம் பருப்பு, பிரேசில் நட்ஸ் மற்றும் எள்ளு ஆகியவற்றை ஒவ்வொன்றாக கடாயில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3: இப்போது, வறுத்த அனைத்து பொருட்களையும் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆறவைத்து பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -4: அடுத்து ஒரு கடாயில், 1 கப் இடித்த வெல்லத்தினை சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக காய்த்து கொள்ளுங்கள். அதன் பின், இதில் ஏலக்காய் தூளினை சேர்த்து கலந்து விடுங்கள்.

ஸ்டேப் -5: இப்போது, காய்த்த வெல்ல பாகுடன் அரைத்த நட்ஸ் பொடிகளை சேர்த்து, 1 ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். பிறகு, இதனை மிதமான சூட்டில் சிறிய சிறிய உருண்டையாக பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -6: இந்த உருண்டைகளை, காற்று படாத ஒரு டப்பாவில் சேர்த்து 10 அல்லது 15 நாட்களுக்கு பயன்படுத்தலாம். இந்த உருண்டைகளை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு இருக்கும் ஞாபக மறதி நீங்கி நினைவுத்திறன் அதிகரிக்கும்.