Tamil Years 60

தமிழ் மாதங்கள் நமக்கு தெரியும் – தமிழ் ஆண்டுகள் 60 அதன் அர்த்தங்கள் என்ன தெரியுமா

5/5 - (4 votes)

தமிழ் மாதங்கள் சித்திரை தொடங்கி பங்குனியில் முடிவடைகிறது எனவும், அந்த பனிரெண்டு மாதங்களும் நமக்கு தெரியும். ஆனால், தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் நமக்கு தெரியுமா? அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களும், சுழற்சி முறையில் அறுபது வருடங்களுக்கு ஒரு முறை வந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு வருடமும் வரும் தமிழ் ஆண்டின் பெயருக்கு ஏற்றார் போலவே அந்த ஆண்டு சுகமாகவோ, துக்கமாகவோ, பிரச்சினையாகவோ இருக்கும். அந்த வகையில் இந்த வருடம் பிறந்த ஆண்டு குரோதி. குரோதி என்றால் கடிந்திடு கோபமுறும் என்று அர்த்தம். அதாவது பகைக்கேடு என்று பொருள். இந்த ஆண்டும் அப்படித் தான் இருக்கும்! தமிழ் ஆண்டுகள் 60 இன் பெயர்களும், அதன் அர்த்தங்களும் இங்கே!

அறுபது வருடங்கள் உருவானது எப்படி?

அறுபது தமிழ் வருடங்கள் எப்படி உருவாகின என்பதற்கு ஒரு இதிகாச கதை ஒன்று உள்ளது தெரியுமா? ஒரு முறை கிருஷ்ணர், நாரதரைத் தன் ரதத்தில் ஏற்றிக் கொண்டு சென்றார். வழியிலே நீரோடை ஒன்றைக் கண்ட நாரதர், நீர் அருந்தச் சென்றார். முதலில் குளித்து விட்டு, நீரை அருந்துமாறு கிருஷ்ணர் கூறினார். ஆனால் இந்த கட்டளை யைப் புறக்கணித்து விட்டு நாரதர் குளிக்காமலேயே நீரை அருந்தினார். என்ன ஆச்சரியம் உடனே அவர் ஒரு அழகிய பெண்ணாக ஆகிவிட்டார். அங்கே கிருஷ்ண ரும் இல்லை ரதமும் இல்லை. நாட்டிலே சுற்றி அலைந்த பெண் உருவிலான நாரதர், ரிஷி ஒருவரின் ஆசிரமத்தை அடைந்தார்.

பெண்ணாக மாறிய நாரதர்

சமாதியிலிருந்து மீண்ட ரிஷி, தன் எதிரே அழகிய பெண் நிற்பதைக் கண்டார். தன்னை சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளுமாறு அவள் வேண்டவே, அவளையே மணந்தார். அந்தப் பெண்ணும் அறுபது பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். ஒரு நாள் அறுபது பிள்ளைகளும், கணவனான ரிஷியும் இறந்து விட்டனர். துக்கம் தாளாமல் கதறி அழுத பெண், ஈமக்கிரியைகளைக் கூட செய்ய முடியாத அளவில் மிகவும் சோர்ந்து போனாள். அதிபயங்கரப் பசி அவளை வாட்டியது.

எல்லாம் மாயை என்பதே அர்த்தம்

மாயையின் மகிமையை அறிய விரும்பிய நாரதர், காலத்திற்கு உருவம் கிடையாது. ஆனால் அந்த காலமே, மாயைக்கு உருவமாக இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தார். நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அறுபது குண விசேஷங்களையே அறுபது பிள்ளைகளான வருடங்கள் வெளிப்படுத்துகின்றன. சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்திற்கு செல்லும் வழியில் உள்ள அறுபது படிக்கட்டுகளிலும் இந்த அறுபது தமிழ் வருடங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.

அறுபது வருடங்களின் பெயர்களும் அர்த்தங்களும்

அறுபது வருடங்களின்
பெயர்கள்
  அர்த்தங்கள்
பிரபவ (Prabhava)உதயம் (Udhayam) – Rise
விபவ (Vibhava)ஒப்பில்லா பெருமை (Oppilla Perumai) – Unparalleled Greatness
சுக்ல (Shukla)ஒளி மிகுந்த வானத்தை போன்ற வெண்மை (Oli Miguntha Vaanathai Ponra Vennai) – White Like a Bright Sky
பிரமோத (Pramoda)உவகை பொங்கும் (Uvagai Pongum) – Overflowing Delight
பிரஜாபதி (Prajapati)உருவாக்கும் நாயகன் (Uruvaakum Naayagan) – Creator Hero
ஆங்கிரச (Angirasa)திருமிக்க தவமுனி (Thirumikka Thavamuni) – Sage of Great Penance
ஸ்ரீமுக (Shrimukha)உளமேற்கும் (Ulamaerkum) – Auspicious Face
பவ (Bhava)உள்ளம் உள்ளது காட்டும் (Ullam Ulladhu Kaattum) – Revealing the Heart
யுவ (Yuva)இளமை எழிலுறும் (Ilama Ezhilurum) – Youthful Charm
தாது (Dhatu)இதயம் உவந்து தரும் (Idhayam Uvandhu Tharum) – Gives Joy to the Heart
ஈஸ்வர (Ishvara)இறைமை நிறைந்திடும் (Iraimai Niraindhidum) – Filled with Divinity
வெகுதானிய (Vekudhaniya)இல்லம் செழித்திடும் (Illam Sezhithidum) – Home Prosperity
பிரமாதி (Pramathi)தலைமை தாங்கிடும் (Thalaimai Thaangidum) – Leadership
விக்ரம (Vikrama)தைரியம் நிலைத்திடும் (Thairiyam Nilainthidum) – Steadfast Courage
விருஷ (Vrisha)நிலையுற நின்றிடும் (Nilaiyura Nindridum) – Steadfast
சித்திர பானு (Chitra Bhanu)நிறைந்த சித்திகள் விளங்கும் (Niraindha Siththigal Vilangum) – Full of Achievements
சுபானு (Subhanu)நன்மைகள் பெருக்கிடும் (Nanmaigal Perukkidum) – Increases Goodness
தாரண (Tarana)இளமை பூண்டிடும் (Ilama Poondidum) – Embellished with Youth
பார்த்திப (Parthiba)ஆளுமை கொண்டிடும் (Aalumai Kondidum) – Possessing Authority
வியய (Vijaya)செலவிட செயல் தரும் (Selavida Seyal Tharum) – Spending Power
ஸர்வஜித் (Sarvajit)தொட்டது துலங்கும் (Thottadhu Thulanguum) – Everything Shines
சர்வதாரி (Sarvadhari)அணியெல்லாம் பூண்டிடும் (Aniyellaam Poondidum) – Adorned with Ornaments
விரோதி (Virodhi)கெட்டது விரட்டிடும் (Kettadhu Virattidum) – Drives Away Evil
விக்ருதி (Vikruti)கேடுற்ற எழில் (Keduttra Ezhil) – Harmed Beauty
கர (Kara)செயல் திறமுறும் (Seyal Thiramurum) – Efficient in Action
நந்தன (Nandana)சேயென கொஞ்சலுறும் (Seyena Konjalurum) – Like a Child’s Prattle
விஜய (Vijaya)நல்வருகை தந்திடும் (Nalvarugai Thandhidum) – Brings Good Arrival
ஜய (Jaya)நல்வெற்றி தந்திடும் (Nalvetri Thandhidum) – Brings Success
மன்மத (Manmatha)காதலுற கவர்ந்திடும் (Kaathalura Kavarnthidum) – Attracts with Love
துர்முகி (Durmukhi)வெம்மை காய்ந்திடும் (Vemmai Kaayndhidum) – Dries Heat
ஹே விளம்ப (Hevilamba)ஆடகப் பொன் போலும் நற்செயல் (Aadakap Pon Polum Narseyal) – Good Deeds Like Gold
விளம்பி (Vilambi)நாடலுறு சொல் செயல் (Naadaluru Sol Seyal) – Deeds with Words
விகாரி (Vikari)நளினமுறு அழகின் திரிபு (Nalinamuru Azhagin Thiribu) – Deviation of Grace
சார்வரி (Sarvari)எல்லையில்லா இன்ப ஒளி (Ellaiyillaa Inba Oli) – Endless Light of Joy
பிலவ (Pillava)குகையுள் தோன்றிடும் (Gugaiyul Thoondridum) – Appears in a Cave
சுபகிருது (Subhakridu)வகையுறு நலமே வளைந்திடும் (Vakaiyuru Nalam Valaindhidum) – Curved Benevolence
சோபகிருது (Shobhakridu)வடிவுறு எழில் நிறைந்திடும் (Vadivuru Ezhil Niraindhidum) – Full of Beauty
குரோதி (Krodhi)கடிந்திடு கோபமுறும் (Kadinthidu Kopamurum) – Fierce Anger
விஸ்வாவசு (Vishvavasu)படிந்திடும் அன்பில் பழகிடும் (Padindhidum Anbil Palagidum) – Filled with Affection
பராபவ (Parabhava)வடிந்திடும் புகழில் வந்திடும் இகழ் (Vadindhidum Pugazhil Vandhidum Igaz) – Fame that Brings Disgrace
பிலவங்க (Pilavanga)நீரை கடக்க உதவும் சாதனம் (Neerai Kadakka Uthavum Saadhanam) – Means to Cross Water
கீலசு (Kilasa)பழைமையின் வடிவம் (Palaimaiyin Vadivam) – Form of Antiquity
சௌம்ய (Saumya)பண்புறு சாந்தம் (Panpuru Santham) – Gentle Calmness
சாதாரண (Sadharana)சமத்துவம் சொல்லிடும் (Samathuvam Sollidum) – Equality
விரோதி கிருது (Virodhi Kridu)வெறுப்பில் விளைந்திடும் (Veruppil Vilainthidum) – Born of Hatred
பரிதாபி (Paridhabi)செய்த பின் வருந்திடும் (Seydha Pin Varundhidum) – Regret After Action
பிரமாதீச (Pramadhisa)பொறுப்பில் தலைமையெனும் (Poruppil Thalaimaiyenum) – Responsible Leadership
ஆனந்த (Ananda)பொலிவோடு மகிழ்வுறும் (Polivoadu Magizhvorum) – Shining Joy
ராட்சச (Rakshasa)கொடுமையை குணம் (Kodumaiyai Gunam) – Cruelty
நள (Nala)கொதி நிலையில குளிர்ச்சி (Kothi Nilayil Kulirchi) – Coolness in Heat
பிங்கள (Pingala)கோலமிகு காவிய சாஸ்திரம் (Kolamigu Kaaviya Shasthiram) – Ornate Poetic Science
காளயுக்தி (Kalayukti)காலத்தில் அறிவுறுத்தும் (Kaalathil Arivuruthum) – Timely Wisdom
சித்தார்த்த (Siddhartha)சிறப்புறு சித்தி தரும் (Sirappuru Sithi Tharum) – Gives Great Success
ரௌத்ர (Raudra)சீர்கெடும் சினமே (Seerkedum Siname) – Destructive Anger
துர்மதி (Durmati)தூண்டிடும் தீமைக்கு (Thoondidum Theemaiyku) – Instigates Evil
துந்துபி (Dundubhi)துய்ய நல்லிசை தரும் (Thuya Nallisai Tharum) – Produces Pure Music
ருத்ரோத்காரி (Rudrotkari)கோபத்தின் விளைநிலமாம் (Kopathin Vilainilamam) – Result of Anger
ரக்தாஷி (Raktakshi)குருதியாய் சிவந்த கண் (Kurud
குரோதன (Kurodhana)விரோதத்தின் வேராகும் (Virothathin Veragum) – Root of Hostility
அக்ஷய (Akshaya)குறைவில்லாமல் நிறைவது (Kuraivillaamal Niraivathu) – Eternal and Abundant

Related Post